Asianet News TamilAsianet News Tamil

சிறுமியிடம் கொடூரமாக நடந்துக்கொண்ட தாய்மாமா… வாயில் ஆசிட் ஊற்றி கழுத்தை அறுத்ததால் அதிர்ச்சி!!

14 வயது சிறுமியை அவரது தாய்மாமா வாயில் ஆசிட் ஊற்றி கழுத்தை அறுத்து மிருகத்தனமாக நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

girl was brutalized by her uncle who poured acid in her mouth and slit her throat
Author
First Published Sep 7, 2022, 9:35 PM IST

14 வயது சிறுமியை அவரது தாய்மாமா வாயில் ஆசிட் ஊற்றி கழுத்தை அறுத்து மிருகத்தனமாக நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், வேங்கடபுரம் கிராமத்தில் 9 ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி கடந்த 05 ஆம் தேதி இரவு வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சிறுமியின் தாய் மாமா குடிபோதையில் வீட்டுக்குள் நுழைந்து அந்த சிறுமியை தாக்க முயன்றுள்ளார். இதை அடுத்து தன்னை பாதுகாத்துக் கொள்ள சிறுமி கழிவறைக்குள் ஓடியுள்ளார். அப்போது சிறுமியைப் பின்தொடர்ந்து சென்று, அங்கு கழிவறையை சுத்தம் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த ஆசிட் பாட்டிலை எடுத்து அவரது வாய் மற்றும் முகத்தில் சிறுமியின் மாமா ஊற்றியுள்ளார்.

இதையும் படிங்க: அடத்தூ.. யாரும் இல்லாதபோது மாமியாருடன் அசிங்கம் செய்த மருமகன்.. 5 ஆண்டு சிறை 10 ஆயிரம் அபராதம் விதித்த கோர்ட்.

சிறுமி வலியால் கத்தத் தொடங்கியதும் சிறுமியின் கழுத்தை அறுத்து விட்டு அந்நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதை அடுத்து தொடர்ந்து சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, சிறுமி ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். சிறுமியை மீட்டு உள்ளூர் மருத்துவமனைக்கு அனுப்பியதோடு அவரது பெற்றோருக்கும் தகவல் கொடுத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், நெல்லூர் ஊரகக் காவல் துறையினர் போக்சோ மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் 511 (பாலியல் வன்கொடுமை முயற்சி) 307 (கொலை முயற்சி) மற்றும் 376 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையும் படிங்க: கணவன் மீது ஏற்பட்ட அலுப்பு.? தனியா வீடு எடுத்து காதலன் உடன் என்ஜாய் செய்த மனைவி.. கழுத்தை அறுத்து கொலை.

இந்நிலையில், முன்னதாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகவில்லை என்றும், சிறுமியின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரப்படுவதாகவும் நெல்லூர் கிராமப்புற காவல் துணைக் கண்காணிப்பாளர் ஒய் ஹரிநாத் ரெட்டி முன்னதாகத் தெரிவித்துள்ளார். மேலும், குற்றத்தில் ஈடுபட்ட நபர் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இன்று அவரைக் கைது செய்து நீதிமன்றக் காவலில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் நெல்லூர் காவல் கண்காணிப்பாளர் விஜய ராவ் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios