விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சித்தலகுண்டு கிராமத்தை சேர்ந்த சித்ரா என்ற மாணவி அங்குள்ள அரசு உயர்நிலைபள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த ஜெயபால் மகன் அடைக்கலம் அருகில் உள்ள தமிழ்பாடி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் படித்து வருகிறார்.
ஒரே கிராமத்தை சேர்ந்த அடைக்கலத்திற்கும் சித்ராவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் தனிமையில் அடிக்கடி சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.  

இந்நிலையில் அந்த மாணவிக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. வலி கடுமையாக இருந்ததால் சித்ராவின்  பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் மாணவி 6 மாத கர்பிணியாக இருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்தனர்.

இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியிடம் விசாரித்ததில் அவர் பதில் கூற மறுத்துள்ளார். இதனால் மாணவி பெற்றோர் திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

மாணவி 18 வயதிற்கு கீழ் இருந்த காரணத்தினால் புகார் அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. புகாரை பெற்றுக்கொண்ட அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் தென்றல், மாணவியிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த அடைக்கலம் என்ற மாணவருடன் தனக்கு பழக்கம் இருந்ததாக கூறியுள்ளார்.

அடைக்கலத்தை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் மாணவியை கர்ப்பமாக்கியதை ஒப்புக்கொண்டார்.  இதனை தொடர்ந்து மாணவன் அடைக்கலத்தை அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில்  கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.