பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த நபர் அந்தப் பெண்ணின் பெண்ணுறுப்பில் இரும்பு கம்பியை  சொருகி வன்கொடுமை செய்துள்ள கொடூர சம்பவம் மிகுந்த அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.  கடந்த 21ஆம் தேதி நாக்பூரில் பர்தி பகுதியில் இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது . பாதிக்கப்பட்ட 19 வயது பெண் தனது சகோதரன் மற்றும் தனது தோழியுடன் நாக்பூர் பர்தி பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளார். ஒரு தனியார் ஆலையில் கூலி தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர் .

 

இந்நிலையில் அங்கு சூப்பர்வைசராக பணி புரிந்து வரும் யோகிலால் ரஹாங்டேல்  என்ற நபர்  பலமுறை இந்தப்  பெண்ணை உடலுறவுக்கு அழைத்து தொல்லை கொடுத்து வந்துள்ளார் இந்நிலையில் அந்தப் பெண்ணின் சகோதரர் மற்றும் அவரது தோழி ,  வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்தனர் .  அப்பொழுது அந்தப் பெண் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.  அப்போது இரவில் அந்தப் பெண் தங்கியிருக்கும் அறைக்கு வந்த யோகி லால் அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.   அந்தப் பெண் அவரிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்தபோது அந்தப் பெண்ணின் வாயில் துணியை வைத்து அடைத்து அந்தப்பெண்ணின் இரண்டு கைகளையும் கட்டிப் போட்டுள்ளார்.

 

இதில் நீண்ட நேரமாகப் போராடி அந்த பெண் ஒருகட்டத்தில் மயக்கமடைந்தார் ,  மயக்க நிலையில் இருந்த  அந்த பெண்ணை கட்டிலில் படுக்கவைத்த யோகி லால் அந்தப் பெண்ணை நிர்வாணப்படுத்தி அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்,   ஆனாலும் அந்த நபரின் காம வெறி அடங்காத நிலையில் அவர் அந்த  பெண்ணின் அந்தரங்க உறுப்பில் இரும்பு கம்பியை சொருகி அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளார்.  அதே நிலையில் அந்த பெண்ணை அங்கேயே  விட்டு அந்த நபர் தப்பிச் சென்றார் ,  \ இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து தனது சகோதரனுக்கு தெரிவிக்க பிறகு அவருடன் சென்று  காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் .  இந்நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொடூரன் யோகி லாலை  தேடிவருகின்றனர்.