காஞ்சிபுரம் அருகே வீட்டு வேலைக்கு அழைத்து சென்று சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த பெண் உள்பட 2 பேரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

உத்திரமேரூர் அருகே உள்ள மானாம்பதி கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் வேளாங்கண்ணி. இவர் அதே பகுதியை சேர்ந்த தம்பதியிடம் 16 வயது மகளை வீட்டு வேலைக்காக அழைத்து சென்றுள்ளார். பின்னர் அற்புதராஜ் மற்றும் இருதயராஜ் என்பவருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பெற்றோரிடம் கூறினார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வெளியே கூறினால் குடும்பத்தையும் அழித்துவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இதைத்தொடர்ந்து சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

இதனையடுத்து சிறுமியின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் அளித்ததை அறிந்ததும், வேளாங்கண்ணி மற்றும் அற்புதராஜ் தலைமறைவாகி விட்டனர். அவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். சிறுமியை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கிய போது அவர்கள் அதனை வீடியோவாகவும் பதிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனை வைத்தே சிறுமியை மிரட்டி சென்னை, செங்கல்பட்டு உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று முதியவர் உட்பட பலருக்கு விருந்தாக்கி உள்ளார். 

ஏற்கனவே வேளாங்கண்ணிக்கு திருமணமாகி கணவரை விட்டு பிரிந்து அற்புதராஜுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். அவர்கள், போலீசாரிடம் சிக்கினால், இந்த வழக்கில் உள்ள முக்கிய குற்றவாளிகள், யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது உள்பட பல்வேறு விவரங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.