சிறுமியை பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்திய வழக்கில் திடீர் திருப்பமாக, தாயே தனது மகளை பாலியல் தொழிலுக்கு அனுப்பியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

உத்திரமேரூர் அருகே உள்ள மானாம்பதி கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் வேளாங்கண்ணி. இவர் அதே பகுதியை சேர்ந்த தம்பதியிடம் 16 வயது மகளை வீட்டு வேலைக்காக அழைத்து சென்றுள்ளார். பின்னர் அற்புதராஜ் மற்றும் இருதயராஜ் என்பவருடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக பெற்றோரிடம் கூறினார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

அந்த புகாரில் மானாம்பதி கண்டிகை பகுதியை சேர்ந்த வேளாங்கண்ணி, தனது 16 வயது மகளை வீட்டு வேலைக்கு அழைத்து செல்வதாக கூறி, காஞ்சிபுரம் கோனேரிக்குப்பம் பகுதியில் வீட்டில் அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார். மேலும் இதை யாரிடமும் தெரிவிக்கக்கூடாது. அப்படி தெரிவித்தால் உன்னையும் குடும்பத்தையும் அழித்துவிடுவதாக மிரட்டியுள்ளார். எனவே, வேளாங்கண்ணி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக இருவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைத்து தேடி வந்தனர். 

இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய வேளாங்கண்ணியை போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் அதிர்ச்சி தகவலை  வெளியிட்டுள்ளனர். வேளாங்கண்ணி ஏற்கனவே பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த விஷயம் சிறுமியின் தாய்க்கும் நன்கு தெரியும். மாதம்தோறும் பணம் கிடைக்கிறது என்பதற்காக அந்த பெண்ணின் தாய் தான் மகளை பாலியல்  தொழிலுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதற்காக சிறுமியின் தாய்க்கு மாதம்தோறும் பணம் வழங்கப்பட்டுள்ளது.

 

சமீப காலமாக பாலியல் தொழிலில் கிடைத்த பணத்தை தன் தாய்க்கு அனுப்பாமல் அந்த சிறுமியே தனக்கு தேவையான ஆபரணங்கள், ஆடைகளை வாங்கியுள்ளார். இதனிடையே, சிறுமியின் தாய் வேளாங்கண்ணியிடம் பணம் கேட்டு தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். அப்போது, பணம் தர முடியாது என வேளாங்கண்ணி கூறியுள்ளார். அதற்கு அவர், உன்னை போலீசில் சிக்க வைக்கிறேன் என மிரட்டி உள்ளார். இதையடுத்து போலீசில் புகார் அளித்துள்ளார் என்பது  விசாரணையில் தெரியவந்துள்ளது. பெற்ற தாயே மகளை பாலியல் தொழிலுக்கு அனுப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.