லிவ்-இன் டூகெதரில் வாழ்ந்து வந்த தம்பதிகள் இடையே திருமணம் செய்துக்கொள்வது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதில் பெண் தனது காதலனை கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லிவ்-இன் டூகெதரில் வாழ்ந்து வந்த தம்பதிகள் இடையே திருமணம் செய்துக்கொள்வது தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதில் பெண் தனது காதலனை கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பை பொவாய் பகுதியில் ரம்ஜான் ஷேக் என்பவரும் ஸொரா ஷா என்பவரும் லிவ்-இன் டூகெதரில் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்கள் கடந்த ஓராண்டாக வாழ்ந்து வந்த நிலையில் அந்த பெண் சில காலமாக ஷேக்கிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டு வந்திருக்கிறார். ஆனால், ரம்ஜான் ஷேக் அதற்கு ஒத்துழைக்கவில்லை.
இதையும் படிங்க: 4 வயது குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து சீரழித்த அரசு பள்ளி ஆசிரியர்.. தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்
தொடர்ந்து காலதாமதம் செய்ததால் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவர்களுக்கு கருத்து வேறுபாடு முற்றியதை அடுத்து ஸொரா ஷா ரம்ஜான் ஷேக்கை தன்னுடன் காவல்நிலையத்திற்கு வரும்படி கூறியிருக்கிறார். ஆட்டோ டிரைவரான ரம்ஜான் ஷேக்கும் அவருடன் சென்றிருக்கிறார். அப்போது ஸொரா ஷா, ஷேக் மீது மோசடி புகார் கொடுக்க விரும்புவதாக கூறியதால் ரம்ஜான் ஷேக் காவல்நிலையம் செல்லும் வழியிலேயே வர மறுத்துவிட்டார்.
இதையும் படிங்க: அதிமுக முன்னாள் அமைச்சரின் மருமகன் திடீர் தற்கொலை...! காரணம் என்ன..?
இதனால் ஆத்திரமடைந்த ஸொரா ஷா தனது துப்பட்டாவால் அவரது கழுத்தை இறுக நெரித்திருக்கிறார். இதில் நிலைக்குலைந்து ஷேக் அங்கேயே உயிரிழந்தார். இதை அடுத்து பின்னர் ஆரே பகுதி காவல்நிலையத்தில் ஸொரா ஷா சரணடைந்திருக்கிறார். தகவல் அறிந்ததும் இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இதனிடையே ஸொரா ஷா மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
