பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் செவிலியர் ஒருவர் ரஜத் என்பவருடன் டேட்டிங் செயலி மூலம் பழகி வந்திருக்கிறார். இதையடுத்து கடந்த மார்ச் 24ம் தேதி நியூ பெல் ரோட்டில் உள்ள தனியார் உணவு விடுதியில் இரவு பார்ட்டிக்காக ரஜத் நர்ஸை அழைத்துள்ளார். 

காதலிப்பதாக கூறி டின்னருக்கு அழைத்து இளம் பெண்ணை நீச்சல் வீரர்கள் 4 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெங்களூருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டேட்டிங் செயலி மூலம் பழக்கம்

பெங்களூருவில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் செவிலியர் ஒருவர் ரஜத் என்பவருடன் டேட்டிங் செயலி மூலம் பழகி வந்திருக்கிறார். இதையடுத்து கடந்த மார்ச் 24ம் தேதி நியூ பெல் ரோட்டில் உள்ள தனியார் உணவு விடுதியில் இரவு பார்ட்டிக்காக ரஜத் நர்ஸை அழைத்துள்ளார். அப்போது பெண்ணை நைசாக பேசி ஒரு அறைக்கு ரஜத் அழைத்து சென்றிருக்கிறார். 

கூட்டு பலாத்காரம்

சிறிது நேரத்தில் ரஜத் நண்பர்கள் 3 பேரும் அந்த அறைக்குள் சென்றிருக்கிறார்கள். அப்போது செவிலியர் பெண்ணை ரஜத்தும் உள்பட 4 பேரும் மிரட்டி தொடர்ந்து மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பாக வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என இளம்பெண்ணை மிரட்டிவிட்டு அந்த கும்பல் சென்றனர். 

கைது

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் பெங்களூரு சஞ்சய்நகர் காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை கூறி கதறி அழுதுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதை அடுத்து ரஜத், தேவ் சரோஹா, யோகேஷ் குமார், ஷிவ் ரானா ஆகிய நால்வரும் டெல்லியை சேர்ந்தவர்கள் என்றும், நீச்சல் பயிற்சிக்காக பெங்களூருவுக்கு வந்திருந்த போது இந்த சம்பவத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள் என தெரிய வந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையும் படிங்க;- உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரன்.. திமுக நிர்வாகி உள்பட 8 கைது.!