மனைவி உயிரிழந்த நிலையில் அவரின் தங்கையை திருமணம் செய்துவைக்க மாமியார் மறுப்பு தெரிவித்ததால் தனது நான்கு குழந்தைகளையும் கிணற்றில் வீசி தந்தை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மனைவி உயிரிழந்த நிலையில் அவரின் தங்கையை திருமணம் செய்துவைக்க மாமியார் மறுப்பு தெரிவித்ததால் தனது நான்கு குழந்தைகளையும் கிணற்றில் வீசி தந்தை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் போஷலா கிராமத்தைச் சார்ந்தவர் புர்காராம் இவருக்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதியருக்கு ஜியோ(9) வயது நெசிலா (7) ஹீனா(3) மற்றும் லாசி(1) ஆகிய நான்கு மகள்கள் இருந்தனர் இந்நிலையில் அவரது வாழ்க்கை மிக மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென அவரது மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் அவர் உயிரிழந்தார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மனைவியை பறிகொடுத்த புர்காராம் கடுமையான மன உளைச்சலில் அவதிப்பட்டு வந்தார். மறுபுறம் தாய் இல்லாததால் குழந்தைகள் ஏக்கத்தில் பரிதவித்து வந்தனர். பராமரிக்கவும் ஆள் இன்றி இருந்துவந்தனர். மனைவி இறந்த நிலையில் துர்கா ராம் தனது மகள்களுக்கு ஒரு தாய் தேவை என உணர்ந்தார். அதனால் தனது மனைவியின் தங்கையை தனக்கு திருமணம் செய்து கொடுக்குமாறு தனது மாமியாரிடம் கேட்டார், ஆனால் அவரது மாமியார் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார், இது நாள் ஆத்திரமடைந்த புர்காராம் அவரது மகள்கள் ஜியோ, நொசிலா, ஹீனா, மற்றும் லாசி ஆகியோருக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்தார். தந்தை சாப்பிட கொடுப்பதாக எண்ணி குழந்தைகளும் அதை பருகினர். பின்னர் மயக்க நிலையில் இருந்த குழந்தைகளைர புர்காராம் அருகில் இருந்த கிணற்றில் வீசினார்.

இறுதியாக புர்காராமும் அதில் குதித்து தற்கொலைக்கு முயன்றார், அவர் குதிப்பதை சிலர் பார்த்துவிட்டனர். இதனால் அவர்கள் ஓடி வந்து புர்காராமை காப்பாற்றினார். உடனே இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் துர்திஷ்டவசமாக அவரின் 4 குழந்தைகளும் கிணற்றில் மூழ்கி உயிரிழந்தனர். பின்னர் அவர்களது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் புர்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மனைவியின் தங்கையை கட்டிக் கொடுக்காததால் மனமுடைந்து தான் பெற்ற பிள்ளைகளை தந்தையே கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.