கல்லூரி மாணவியை ஆசிரியர் காதலித்தபோது நெருக்கமாக இருந்த வீடியோக்களை ஆசிரியர் வெளியிட்டதால் மாணவி பரிதாபமாக தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஒடிஸா மாநிலம், போலாங்கீர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் கல்லூரியில் படித்த போது அதே கல்லூரியில் ஆசிரியாராக இருந்த கணேஷ் செல்மா என்பவரை காதலித்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக கூறி கணேஷ் பல முறை அந்த பெண்ணிடம் நெருக்கமாக இருந்துள்ளார். இதனை அந்த பெண்ணிற்கு தெரியாமல் வீடியோ, புகைப்படங்களை எடுத்து வைத்துள்ளார்.

இந்நிலையில் மாணைவியை ஏமாற்றி விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். நெருக்கமாக எடுத்த ஆபாச வீடியோக்கள் அனைத்தையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி மன உளைச்சலால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடர்ந்துள்ளனர்.