பாதிவழியில் நண்பனின் மனைவியை சந்தித்த அந்த நபர் அவரை  வங்கியில் தான்  இறக்கி விடுவதாக கூறி தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றியுள்ளார், 

நண்பனின் வீட்டுக்கு சென்று சாப்பிட்டதுடன் அவரது மனைவியை சக நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . ஒடிசாவில் கலஹந்தி மாவட்டத்தைசே சேர்ந்த 26 வயது பெண்ணுக்க இத் துயர சம்பவம் நடந்துள்ளது. அந்த பெண்ணின் கணவர் பணி நிமித்தமாக வெளியூரில் தங்கி பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி மாலை பவானிபட்னா அருகே உள்ள ஒரு கிராமத்தில் தனது இல்லத்திற்கு தனது கணவரின் நண்பர் ஒருவர் சில பொருட்களை தனது வீட்டிற்கு கொண்டு வந்துள்ளனர் .

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்நிலையில் வீட்டில் கணவர் இல்லாத நிலையில் மாமியார் மட்டும் உடன் இருந்தார். இந்நிலையில் வீட்டுக்கு வந்த நபரிடன் இரவு வீட்டிலேயே தங்கி விட்டு காலையில் போகலாம் என அந்த பெண்ணின் மாமியார் செல்லி இருக்கிறார், இதனால் அந்த நபரும் நண்பனின் வீட்டிலேயே தங்கி, நண்பனின் மனைவி கையால் சாப்பிட்டுவிட்டு அங்கேயே உறங்கினார் . பிறகு மறுநாள் 12 ஆம் தேதி காலை தனது இருசக்கர வாகனத்தில் அந்த நபர் அவரது வீட்டுக்கு திரும்பினார், அப்போது நண்பனின் மனைவி பக்கத்தில் உள்ள வங்கிக்கு பணம் எடுக்க புறப்பட்டுக் கொண்டிருந்தார் . பாதிவழியில் நண்பனின் மனைவியை சந்தித்த அந்த நபர் அவரை வங்கியில் தான் இறக்கி விடுவதாக கூறி தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றியுள்ளார், 

அதை நம்பி ஏறிய அந்த பெண்ணை சிறிது தூரம் சென்றவுடன் யாரும் இல்லாத இடத்தில் வாகனத்தை நிறுத்தி, அந்த பெண்ணை ஒதுக்குப்புறமான இடத்துக்கு கடத்திச் சென்றதுடன் அங்கு மேலும் தனது இரண்டு நண்பர்களை வரவழைத்து அந்தப் பெண்ணை நண்டனின் மனைவி என்றும் பாராமல் மூவரும் பாலியல் வன்புணர்வு செய்தனர். பின்னர் அம்மூவரும் அந்த பெண்ணை அதே இடத்தில் விட்டுச் சென்றதுடன் அந்தப் பெண்ணிடத்தில் இந்த ஏடிஎம் கார்டையும் பறித்துச் சென்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட பெண் பவானிபட்னா சதர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் . இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று நபர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர் . அவர்களிடத்தில் இருந்தது ஒரு ஸ்கூட்டர் , மற்றும் அப்பெண்ணின் ஏடிஎம் கார்டு உள்ளிட்டவர்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் .