நண்பனின் மனைவியின் மீது நீண்ட நாட்களாக ஏக்கம் வைத்த நான்கு பேர் சினிமா பாணியில் அந்தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .  பெண்களுக்கு எதிராக குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மேலும் ஒரு பாலியல் வன்புணர் சம்பவம் அரங்கேறியுள்ளது,   இவ்வகை குற்றஞ்சம்பவங்களை தடுக்க அரசும் காவல்துறையும் எத்தனையோ  நடவடிக்கைகளை எடுத்துவந்தாலும் குற்ற சம்பவங்கள் மட்டும் குறைந்தபாடில்லை .  சில நேரங்கள் நடக்கும் நிகழ்வுகள் அடப்பாவமே இப்படி எல்லாமா நடக்கும் என கேட்போரை வாயடைக்க வைத்துவிடுகிறது, அந்த அளவிற்கு வக்ரமும் வன்மும் நிறைந்தாக அந்த சம்பவங்கள் இருப்பதுதான் அதற்கு காரணம்.  

அப்படி ஒரு வன்னம் நிறைந்த சம்பவம்  உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில்  நடந்துள்ளது ,  உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி அருகே அமைந்துள்ளது  சிரோலி கிராமம் இந்த கிராமத்தில்  வசித்து வந்த ஒருவரின்  மனைவி மீது அவரின் நான்கு நண்பர்களுக்கு நீண்டநாட்களாக அந்த பெண்ணை எப்படியாவது அடைய வேண்டும் என்ற ஏக்கம் இருந்து வந்துள்ளது .  மிகவும் கண்ணுக்கு லட்சணமாக இருந்த தன் நண்பனின் மனைவி மீது  அவர்களின் தீராக ஏக்கம்  நாள் செல்லசெல்ல  காம  வெறியாக மாறியது. அந்த பெண்ணை அடைய தடையாக உள்ள தனது நண்பனை எப்படியாவது அந்த இடத்திலிருந்து காலி செய்ய வேண்டும் என திட்டம் போட்ட அந்நால்வரும் நீண்ட நாடுகளாக யோசித்து ,  தன் நண்பனை போதைப்பொருள் வழக்கில் சிக்கவைத்து அவரை ஒருவழியாக சிறைக்கு அனுப்பிவிட்டனர்.  இந்நிலையில்  அறையில் தனியாக வசித்த நண்பனின் மனைவியை  தூக்க திட்டம் போட்ட அந்த நான்கு பேரும் அந்தப் பெண்,  வீட்டில் தனியாக இருக்கும்போது உள்ளே நுழைந்து துப்பாக்கி காட்டி மிரட்டி அந்தப் பெண்ணை கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்தனர். 

 

பின்னர் அந்தப் பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றபோது ,  அவர்களிடம் இருந்து சாதுர்யமாக தப்பித்த அந்த பெண் அபயக்குரல் எழுப்பினார் இதனால் ,  அக்கம் பக்கத்தினர் வந்து அகப்பட்டுக் கொள்ளுவோம் என்ற பயத்தில் அந்தப் பெண்ணை உயிருடன் விட்டு நால்வரும் தப்பினர் .  அதே நேரத்தில் இது குறித்து போலீசுக்கு தகவல் கொடுத்தால்  தீர்த்துக்கட்டி விடுவோம் என்றும் அந்த பெண்ணை மிரட்டி சென்றனர்.  இந்நிலையில் சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் வரை நீண்ட யோசனையில் இருந்த அந்தப் பெண் ,  வருவதை பார்க்கலாம் ஆனால் தவறு செய்தவர்கள் தண்டிக்காமல் விடக்கூடாது என்ற தைரியத்தில் காவல் நிலையம் சென்று அந்த நால்வர் மீதும் புகார் கொடுத்தார். உடனே அந்த பெண்ணின் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் ,  அந்தப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த அந்நால்வரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.