Asianet News TamilAsianet News Tamil

ரயிலில் பெண் போலீஸ் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. கழுத்து,மார்பில் சரமாரியாக குத்திய பூ வியாபாரி. . கைது

பெண்கள்  பெட்டியில் பூ வியாபாரம் செய்ய  இடையூறு செய்து வந்த நிலையில் பெண் போலிசை கத்தியால் குத்தியதாக  பூ வியாபாரி  வாக்குமூலம் அளித்துள்ளார்.  

 

 

Flower seller arrested in case of female police stabbing in Chennai train
Author
Chennai, First Published Aug 27, 2022, 9:16 AM IST

பெண்கள்  பெட்டியில் பூ வியாபாரம் செய்ய  இடையூறு செய்து வந்த நிலையில் பெண் போலிசை கத்தியால் குத்தியதாக  பூ வியாபாரி வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த 23 தேதி  மின்சார ரயிலில் பெண் போலீஸ் கத்தியால் குத்தப்பட்ட  வழக்கில் போலீஸ் நடத்திய விசாரணையில் இது தெரிய வந்துள்ளது.

முழு விவரம் பின்வருமாறு பெண்கள் ரயில் பெட்டிகளில் ஆண்கள் ஏற கூடாது என்பது விதி, சில நேரங்களில் இளைஞர்கள் மற்றும் மது ஆசாமிகள் பெண்கள் பெட்டியில் ஏறி ரகளை செய்வது, பாலியல் சீண்டலில் ஈடுபடுவது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது, இதனால் பெண்கள் பெட்டிக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி இரவு கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி மின்சார ரயில் புறப்பட்டது, அப்போது ஒரு நபர் மகளிர் பெட்டியில் ஏறினார், அங்கிருந்த போலீஸ் ஆசீர்வா (29) அந்த நபரை தடுத்தார்.அப்போது அந்த நபர் மறைத்து வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தால் பெண் போலீசின் கழுத்தில் சரமாரியாக குத்தினார், பின்னர் அந்தப் பெட்டியில் இருந்து குதித்து தப்பினார்,

Flower seller arrested in case of female police stabbing in Chennai train

 இதனைக் கண்டு அலறிய பயணிகள் காயமடைந்த பெண் காவலரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர், தற்போது அவருக்கு ரயில்வே மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது,  இச்சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது, சிசிடிவி கேமராக்கள் ஆராயப்பட்டது, பெண் காவலரை குத்தியது யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.

இதையும் படியுங்கள்:  பேய் ஓட்டுகிறேன், 13 வயது சிறுமி & தம்பிக்கு நேர்ந்த விபரீதம் - மதபோதகர் செய்த வெறிச்செயல் !

அதில் சம்பவத்தன்று ரயில்நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 10க்கும் மேற்பட்டோரின் புகைப்படங்களை சிகிச்சையில் இருந்துவரும் பெண் போலீசிடம் காட்டி விசாரித்தனர். அதில் ஒரு நபரை பெண் காவலர் அடையாளம் காட்டினார், அந்த நபர் யார் என்று போலீஸார் விசாரித்ததில் அவர் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பூ வியாபாரம் செய்து வரும் தனசேகர் (40) என்பது தெரியவந்தது, பின்னர் தனசேகர் தூக்கி வந்து போலீசார் விசாரித்தனர், அப்போது,  நான் திண்டிவனத்தை சேர்ந்தவன், அங்கு ரயிலில் ஏறி பூ, பழ, வியாபாரம் செய்து வந்தேன், ஆனால் அப்போது ரயில் பெட்டிகளில் ஏறக்கூடாது என போலீஸார் தொடர்ந்து எனக்கு இடையூறு செய்து வந்தனர்.

இதையும் படியுங்கள்:  மது போதையில் பெற்ற மகள்களையே.. ஒரு தந்தை செய்யுற காரியமா இது? அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி

பல நேரங்களில் என்னை அவமரியாதை செய்து ரயில் பெட்டிகளில் இருந்து இறக்கி விட்டுள்ளனர், இதனால் ரயில்வே போலீசார் மீது ஒருவித கோபத்தில் இருந்து வந்தேன், இந்நிலையில்தான் சென்னையில் பூக்கடை பகுதியில் உள்ள நடைபாதையில் என் மனைவியுடன் தங்கி பூ வியாபாரம் செய்து வந்தேன்,

Flower seller arrested in case of female police stabbing in Chennai train

அப்போது ரயில் பெட்டிகளில் ஏறி  பூ வியாபாரம் செய்தேன், அப்போது பெண்கள் பெட்டியில் ஏறக்கூடாது என ரயில்வே போலீஸார் தடுத்து வந்தனர், இந்த ஆத்திரத்தில் தான் 23ஆம் தேதி கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் பெண்கள் பெட்டியில் மதுபோதையில் அமர்ந்திருந்தேன், அப்போது அங்கு வந்த ரயில்வே பெண் போலீஸ் பெட்டியில் இருந்து இறங்குமாறு கூறினார்,

ஏற்கனவே ரயில்வே போலீஸார் மீது நான் மிகுந்த ஆத்திரத்தில் இருந்து  வந்த நிலையில், அந்த இளம்பெண் என்னை அவமானப்படுத்தியதை தாங்கமுடியாமல் மறைத்து வைத்திருந்த பூ வெட்டில் கத்தியால் அவரின்  கழுத்து மார்பில் சரமாரியாக குத்தினேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios