ஜெயில் சுவர் ஏறி குதித்து 2 பெண்கள் தப்பித்து ஓட்டம்..! ஜெயிலருக்கு அல்வா கொடுத்த கில்லாடிகள்..! முதல்முறையாக...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், அட்ட குளங்கரை என்ற பகுதியில் உள்ளது பெண்களுக்கான ஜெயில். இந்த ஜெயிலில் திருடு, கொலை, கொள்ளை என பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்ட பெண்களை அடைத்து வைத்து உள்ளனர்.
ஜெயில் சுவர் ஏறி குதித்து 2 பெண்கள் தப்பித்து ஓட்டம்..! ஜெயிலருக்கு அல்வா கொடுத்த கில்லாடிகள்..! முதல்முறையாக...
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், அட்ட குளங்கரை என்ற பகுதியில் உள்ளது பெண்களுக்கான ஜெயில். இந்த ஜெயிலில் திருடு, கொலை, கொள்ளை என பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்ட பெண்களை அடைத்து வைத்து உள்ளனர். இந்த நிலையில் ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஷில்பா மற்றும் சந்தியா என்ற இரண்டு இளம்பெண்கள் விசாரணை கைதிகளாக இந்த ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தனர்.
இவர்கள் இருவரும் சிலருக்கு தெரியாமல், அங்கிருந்து தப்பித்து உள்ளனர். அதன்படி நேற்று மாலை 5 மணி அளவில் கைதிகளின் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது சந்தியாவும் ஷில்பாவும் இல்லாததை கண்டு பிடித்தனர். பின்னர் சிசிடிவி கேமராவை கொண்டு ஆராய்ந்த போது, இவர்கள் இருவரும் ஜெயிலில் உள்ள குளியல் அறைக்கு செல்லும் வழியாக கடக்கின்றனர்.
அங்குதான் ஜெயிலில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டும் இடமும் குளியலறை அருகில் தான் உள்ளது. எனவே அந்த இடம் சற்று மேடாக இருப்பதால் இதனை பயன்படுத்தி இவர்கள் இருவரும் அங்கிருந்த சுவரை தாண்டி தப்பித்து சென்று உள்ளனர்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்ன வென்றால், கேரளாவில் ஜெயிலிருந்து பெண்கள் தப்பித்து சென்றது இதுவே முதல் முறை என்பது குறிப்[பிடத்தக்கது.