Asianet News TamilAsianet News Tamil

18 மாதங்களாக இறந்து போன மகன் உடலுக்கு ஆயில் மசாஜ் செய்த குடும்பம் - அதிர்ச்சி சம்பவம்

மகன் இறந்து 18 மாதங்கள் ஆன பிறகும் மகனுக்கு ஆயில் மசாஜை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Faulty Oximeter Made Family Believe Their Dead Son Was Alive Kept Body At Home For 18 Months
Author
First Published Oct 4, 2022, 8:10 PM IST

வருமான வரித்துறை அதிகாரி ஒருவரின் சடலத்துடன் சுமார் 18 மாதங்கள் அவரது குடும்பத்தினர் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இறந்தவரின் உடலை தகனம் செய்ய விடாமல் தடுத்ததற்கு தாயின் கடும் மூடநம்பிக்கையே காரணம் என்று கூறியுள்ளனர் காவல்துறை அதிகாரிகள்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் லக்கன் சிங் யாதவ் மற்றும் அவரது குழுவினர், கான்பூர் போலீஸ் கமிஷனரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.  அந்த அறிக்கையில், ‘ஒட்டுமொத்த குடும்பமும் இறந்து போன விம்லேஷின் அம்மாவை நம்பி உடலைப் பராமரிக்கத் தொடங்கினர் என்று கூறப்பட்டுள்ளது.

Faulty Oximeter Made Family Believe Their Dead Son Was Alive Kept Body At Home For 18 Months

இதையும் படிங்க..ஓபிஎஸ் மகனுக்கு மந்திரி பதவி.. ஓபிஎஸ்சுக்கு இணைப் பொதுச்செயலாளர் பதவி - உண்மையை உடைத்த தங்கமணி !

மேலும் அதில், விம்லேஷின் தாய் ராம் துலாரியின் மகன் உயிருடன் இருப்பதாக நம்புவதற்கு ஆதாரமாக இருந்தது ஆக்சிமீட்டர் தான். ஆக்சிமீட்டரின் தவறான கணிப்பால் தான் இது நடந்துள்ளது. காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள், விம்லேஷின் வீட்டை, குறிப்பாக அவரது உடல் வைக்கப்பட்டிருந்த அறையை ஆய்வு செய்து, குடும்ப உறுப்பினர்களிடம் ஒவ்வொருவராகப் பேசினர். விம்லேஷின் மனைவி மிதாலி தீட்சித், அவர் இறந்துவிட்டார் என்று தனக்குத் தெரியும் என்று குழுவிடம் கூறினார்.

ஆனால் அவர் உயிருடன் இருக்கிறார் என்று எல்லோரும் சொல்லத் தொடங்கினர். அதனால் அவளும் அவர்களை நம்பினாள். அவரது மரணம் குறித்து அவரது அலுவலகத்திற்கு தெரிவித்ததாகவும், ஆனால் குடும்ப உறுப்பினர்கள் மற்றொரு கடிதத்தை அனுப்பியதாகவும், அதில் அவர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும் அவர் போலீஸ் குழுவிடம் கூறினார்.

Faulty Oximeter Made Family Believe Their Dead Son Was Alive Kept Body At Home For 18 Months

இதையும் படிங்க..சிறையில் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட சவுக்கு சங்கர்.. பின்னணியில் நடந்தது என்ன ?

கடந்த 18 மாதங்களில் இறந்தவரின் சம்பளத்தை குடும்பத்தினர் பெற்றதற்கான எந்த ஆதாரத்தையும் குழு தாக்கல் செய்யவில்லை. பிறகு விம்லேஷின் உடலை கைப்பற்றிய போலீசார் இறப்பு சான்றிதழை வழங்கினார். பின்னர் 18 மாதங்களுக்கு பிறகு விம்லேஷின் உடலுக்கு இறுதி சடங்குகளை செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க..மகளிர் விரும்பினால் பணத்தை வாங்கி கொண்டு டிக்கெட் கொடுக்கலாம்.. வாய்மொழி உத்தரவு உண்மையா ?

Follow Us:
Download App:
  • android
  • ios