பெற்ற மகளை 2 வருடங்களாக மிரட்டி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய காம கொடூர தந்தையை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

பெற்ற மகளை 2 வருடங்களாக மிரட்டி பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய காம கொடூர தந்தையை போலீசார் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சோழிங்கநல்லூர் கிராம நெடுஞ்சாலை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, சோழிங்கநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறாள். அந்த சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறினார். இதைகேட்ட, தாய் அதிர்ச்சியடைந்தார். உடனே இது தொடர்பாக கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் விசாரணை நடத்தினர். அதில், தனது கர்ப்பத்திற்கு காரணம் தந்தை வர்க்கீஸ்(54) எனவும், கடந்த 2 வருடங்களாக வீட்டில் தாள் இல்லாத நேரத்தில் தன்னிடம் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாகவும், இது தொடர்பாக வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டிதாக கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் சிறுமியின் தந்தை வர்கீஸை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மகளையே தந்தை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.