ஒரு நாள் எனது மாமனார் எனக்கு தெரியாமல் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து என்னை பலாத்காரம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த நான், அவரிடம் கேட்டபோது, இதை வெளியே சென்னால் என்னையும் என் தங்கை, தாயையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். 

மாமனார் மயக்க மருந்து கொடுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மருமகள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வேலூர் மாவட்டம் பொண்னை அடுத்த ஒட்டனேரியைச் சேர்ந்தவர் 18 வயது இளம்பெண். இவர் தனது குழந்தையுடன் நேற்று பொன்னை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், நான் ஓட்டனேரியில் வசித்து வருகிறேன். கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி 16 வயதான எனக்கும் சித்தூர் மாவட்டம் ராமாபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீராமுலு என்பவரது மகன் சதிஷ்குமாருக்கும் கட்டாய திருமணம் நடந்தது. 

திருமணத்திற்கு முன்பு எனது மாமனார் மட்டும் எங்கள் வீட்டிற்கு வந்து என் தாயிடம், தனக்கு சொத்துக்கள் உள்ளது. இதற்கு ஒரே வாரிசு என் மகன்தான். எனவே உங்கள் மகளை எனது மகனுக்கு திருமணம் செய்து கொடுங்கள் என்று ஆசை வார்த்தை கூறினார். இதனால் எனது தாய் இதற்கு சம்மதம் தெரிவித்தார். திருமணத்திற்கு முன்புவரை எனது கணவர் சதிஷ்குமாரை நாங்கள் யாரும் பார்க்கவில்லை. திருமணத்திற்கு பின்னர்தான், என் கணவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

இந்நிலையில் ஒரு நாள் எனது மாமனார் எனக்கு தெரியாமல் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து என்னை பலாத்காரம் செய்தார். இதனால் ஆத்திரமடைந்த நான், அவரிடம் கேட்டபோது, இதை வெளியே சென்னால் என்னையும் என் தங்கை, தாயையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். இதேபோல் தொடர்ந்து என்னை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்தார். இதனால் நான் கர்ப்பமானேன். எனக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனையடுத்துத, என்னை அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாகவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.