கடும் ஆத்திரமடைந்த மாமனார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருமகளை கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த முருகம்மாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 


திருப்பத்தூர் அருகே மருமகளை கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குத்தி ரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க கொலை செய்த மாமனாரை போலீசார் கைது செய்துள்ளனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஜங்களாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணி. இவரது மகன் சிவா (40) ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். கடந்த 2009ம் ஆண்டு கந்திலி குமிடிக்கான்ப்பட்டி பகுதியைச் சார்ந்த முருகேசன் மகள் முருகம்மாளை (36) திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. முருகம்மாள் கலர்பதி பகுதியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

கணவன் மற்றும் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்ட்டதின் காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனையடுத்து கடந்த 3 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இது தொடர்பான வழக்கு நடைபெற்று வருகிறது. கணவனை பிரிந்த முருகம்மாள் கடந்த மூன்று வருடமாக அவருடைய அப்பா வீட்டில் தங்கியுள்ளார்.

இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜங்களாபுரம் பகுதியில் உள்ள கணவன் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் இருந்த அவரது மாமனாரிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இந்த வீடு எனக்கு சொந்தம் நீங்கள் வீட்டைவிட்டு வெளியேறுங்கள் என மாமனாரிடம் கூறியதால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடும் ஆத்திரமடைந்த மாமனார் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மருமகளை கழுத்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த முருகம்மாள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். 

உடனே இந்த கொலை தொடர்பாக அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முருகம்மாள் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து மாமனாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மருமகளை மாமனாரே கொலை செய்த சம்பவம் பெரும் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.