Asianet News TamilAsianet News Tamil

போலீஸ் எச்சரித்தும்.. என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது.. சவால் விட்ட ஓலை சரவணனை சமாதியாக்கிய கும்பல்.!

சென்னை திருவான்மியூர் மாநகராட்சி பள்ளி அருகே ரவுடி ஓலை சரவணன்(35). இவர் பல்வேறு வழக்குகள் நிலுவை இருந்து வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு நடந்த ஒரு கொலை முயற்சி வழக்கில், சிறை தண்டனை அனுபவித்து, ஆறு மாதங்களுக்கு முன் வெளியே வந்தார். 

famous rowdy Olai Saravanan murder case.. two people Arrest
Author
First Published Sep 7, 2022, 9:00 AM IST

சென்னை, திருவான்மியூர் பகுதியில், போலீசார் கடுமையாக எச்சரித்த பிறகும், ஏரியாவில் உலா வந்த ரவுடியை , தீர்த்துக்கட்டிய கும்பலில், இரண்டு பேர் சரணடைந்தனர். 

சென்னை திருவான்மியூர் மாநகராட்சி பள்ளி அருகே ரவுடி ஓலை சரவணன்(35). இவர் பல்வேறு வழக்குகள் நிலுவை இருந்து வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு நடந்த ஒரு கொலை முயற்சி வழக்கில், சிறை தண்டனை அனுபவித்து, ஆறு மாதங்களுக்கு முன் வெளியே வந்தார். இந்நிலையில், நேற்று இரவு திருவான்மியூர், காவலர் குடியிருப்பு பகுதியில் மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். 

இதையும் படிங்க;- எந்நேரமும் ஓயாமல் ஆண் நண்பருடன் செல்போனில் கடலை.. கடுப்பான கணவர் செய்த பகீர் சம்பவம்..!

famous rowdy Olai Saravanan murder case.. two people Arrest

அப்போது, ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் சரவணனை மனைவி கண்முன்னே சரமாரியாக வெட்டினர். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனே தகவல் கிடைத்து திருவான்மியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

 

இந்நிலையில், சரவணன் கொலை வழக்கு தொடர்பாக, எழும்பூர் 13வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் , அடையார் மல்லிப்பூ நகரை சேர்ந்தவர் ராஜதுரை(24). ராஜ்குமார்(26) ஆகியோர் சரணடைந்தனர்.  போலீசார், அவர்களை, சிறையில் அடைக்க அழைத்து சென்றனர். இது குறித்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் கொல்லப்பட்ட சரவணன் மீது திருவான்மியூர் சுரேஷை கொன்ற வழக்கு உள்ளது. 2018ம் ஆண்டு கொலை முயற்சி வழக்கில் சிறைக்கு சென்ற சரவணன், பின் ஜாமீனில் வந்தார். அவரின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக வெளிமாவட்டம் சென்று விடு என போலீசார் சரவணனிடம் அவ்வபோது எச்சரிக்கை விடுத்தனர். ஆனால், சரவணன், என்னை யாரும் எதுவும் செய்ய முடியாது என ஏரியாவில் வலம் வந்தார்.

famous rowdy Olai Saravanan murder case.. two people Arrest

இந்நிலையில் தான் சரவணன் கொல்லப்பட்டார், நீதிமன்றத்தில் சரணடைந்த ராஜதுரை, ராஜ்குமார் மற்றும் சிறையில் உள்ள செல்வா, பாண்டி ஆகியோரை போலீசார் கஸ்டடியில் எடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க;-  மெட்ராஸ் பட பாணியில் கோர்ட்டில் வைத்து ரவுடியை கொல்ல முயற்சி.. அலறியடித்து ஓடிய வழக்கறிஞர்கள்.. பகீர் வீடியோ

Follow Us:
Download App:
  • android
  • ios