Asianet News TamilAsianet News Tamil

மெட்ராஸ் பட பாணியில் கோர்ட்டில் வைத்து ரவுடியை கொல்ல முயற்சி.. அலறியடித்து ஓடிய வழக்கறிஞர்கள்.. பகீர் வீடியோ

சென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர் மயிலாப்பூர் சிவக்குமார். இவர் மீது  இரட்டை கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என 40க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இவரை 2021ம் ஆண்டு  மார்ச் 4ம் தேதி அசோக் நகரில் வைத்து 10 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 

famous Rowdy murder attempt in saidapet court campus
Author
First Published Sep 6, 2022, 8:19 AM IST

பட்டப்பகலில் சினிமா பாணியில் போலீஸ் பாதுகாப்போடு நீதிமன்றத்திற்கு வந்த கூலிப்படை தலைவனும், பிரபல ரவுடி மதுரை பாலாவை கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர் மயிலாப்பூர் சிவக்குமார். இவர் மீது  இரட்டை கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என 40க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இவரை 2021ம் ஆண்டு  மார்ச் 4ம் தேதி அசோக் நகரில் வைத்து 10 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில், ஜாம்பஜாரை சேர்ந்த ரவுடி தோட்டம் சேகர் மகன் அழகுராஜா 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது தந்தை கொலைக்கு பழிவாங்க கூலிப்படை தலைவன் மதுரை பாலா உதவியுடன் தாதா சிவக்குமாரை கொன்றது  விசாரணையில் தெரியவந்தது. 

famous Rowdy murder attempt in saidapet court campus

அதைதொடர்ந்து, தோட்டம் சேகர் மகன் அழகுராஜா, மதுரை பாலா உள்ளிட்டோரை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், பிரபர ரவுடி மயிலாப்பூர் சிவக்குமார் கொலை வழக்கு தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்துக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் புழல் சிறையில் இருந்து நேற்று மதியம் ரவுடி மதுரை பாலா வேனில் அழைத்து வரப்பட்டார். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வேனில் இருந்து இறங்கிய ரவுடி மதுரை பாலா, நீதிமன்றதில் ஆஜராக அந்த வளாகத்தில் நடந்து சென்றுக்கொண்டிருந்தார். 

famous Rowdy murder attempt in saidapet court campus

அப்போது, மெட்ராஸ் பட பாணியில் நீதிமன்ற வளாகத்துக்குள் மின்னல் வேகத்தில் நுழைந்த முகமூடி அணிந்து இருந்த 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று, கூலிப்படை தலைவன் மதுரை பாலாவை கொலை செய்யும் நோக்கில் கத்தி, இரும்பு கம்பியுடன் பாய்ந்தது. முகமூடி அணிந்த நபர்களை பார்த்ததும் விபரீதம் நடக்கப்போவதை உணர்ந்த, அங்கிருந்த போலீசார் விரைந்து செயல்பட்டு ரவுடி மதுரை பாலாவை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த முகமூடி கும்பல் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோட முயன்றது. இதனால், உஷாரான போலீசார், தாக்குதல் நடத்த முயன்ற 5 பேரை துப்பாக்கி முனையில் பிடிக்க முயன்றனர். ஆனால், அதற்குள் சுதாரித்து கொண்ட 2 முகமூடி ஆசாமிகள் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பினர். எனினும், அதில் 3 பேரை துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். இதனை கண்ட வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இதனால் அங்கு சைதாப்பேட்டை நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. 

Follow Us:
Download App:
  • android
  • ios