தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நீராவிமேட்டை சேர்ந்தவர் நீராவி முருகன் (48). பிரபல ரவுடி. இவர் மீது சென்னை, தூத்துக்குடி, ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் ஆள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. 

நெல்லை களக்காடு அருகே பிரபல ரவுடி நீராவி முருகன் போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நீராவிமேட்டை சேர்ந்தவர் நீராவி முருகன் (48). பிரபல ரவுடி. இவர் மீது சென்னை, தூத்துக்குடி, ஈரோடு உட்பட பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் ஆள் கடத்தல், கொலை, கொள்ளை உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. 

இந்நிலையில், இவரை பல்வேறு மாதங்களாக தேடி வந்த நிலையில் நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் இருந்து களக்காடு செல்லும் சாலையில் உள்ள பகுதிகளில் பதுங்கியிருப்பதாக திண்டுக்கல் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். 

இதனையடுத்து, அவரை கைது செய்ய திண்டுக்கல் தனிப்படை போலீசார் முயற்சித்தபோது காவலர்களை தாக்கிவிட்டு அவர் தப்பிச்செல்ல முயன்ற போது என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இது தொடர்பாக போலீசார் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நீராவி முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. என்கவுன்டர் திட்டமிட்டு நடைபெறவில்லை. தற்காப்புக்காக நடைபெற்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.