விழுப்புரத்தில் பயங்கரம்.. பிரபல ரவுடியை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கொடூர கும்பல்..!
விழுப்புரம் மாவட்டம் பிடாகம் நத்தமேடு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான லட்சுமணன்(35). இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் காவல் நிலையங்களில் உள்ளன. இந்நிலையில் இன்று காலை இருசக்கர வாகனத்தில் ஜானகிபுரம் அருகே சென்றுக்கொண்டிருந்தார்.
விழுப்புரத்தில் பிரபல ரவுடி பட்டப்பகலில் மர்ம நபர்களால் பிரபல ரவுடி வெட்டிக் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் பிடாகம் நத்தமேடு பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான லட்சுமணன்(35). இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் காவல் நிலையங்களில் உள்ளன. இந்நிலையில் இன்று காலை இருசக்கர வாகனத்தில் ஜானகிபுரம் அருகே சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு மறைந்திருந்த கும்பல் லட்சுமணன் மீது மிளகாய் பொடியை தூவி உருட்டு கட்டை கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இதனையடுத்து கொலை சம்பவம் தொடர்பாக அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.