Saravana Storeஅம்மாடியோவ்..! 80 கோடி ரூபாய்க்கு போலி ரசீதுகள்..! தில்லாலங்கடி செய்த சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி.!

ரூ.80 கோடிக்கு போலி பில் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாகவும், ஜவுளிகள், நகைகள் பிரிவில் கணக்கில் வராத ரூ.150 கோடி ரொக்கம் மூலம் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதும் வருமான வரித்துறையின் சோதனையில் தெரிய வந்திருக்கிறது.
 

Fake for 80 crore rupees Receipts ..! Saravana Stores Annachi who worked under Dillalangadi.!

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் மற்றும் சரவணா செல்வரத்தினம் ஆகிய 2 நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில், ரூ.80 கோடிக்கு போலி பில் தயாரித்து மோசடியில் ஈடுபட்டதாகவும், ஜவுளிகள், நகைகள் பிரிவில் கணக்கில் வராத ரூ.150 கோடி ரொக்கம் மூலம் பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதும் வருமான வரித்துறையின் சோதனையில் தெரிய வந்திருக்கிறது.Fake for 80 crore rupees Receipts ..! Saravana Stores Annachi who worked under Dillalangadi.!


சென்னை, மதுரை உள்ளிட்ட சரவணா ஸ்டோர்ஸ்க்கு சொந்தமான இடங்களில் கடந்த 1ம் தேதி வருமான வரித்துறை சோதனை நடத்தனர். சூப்பர் சரவணா, சரவணா செல்வரத்தினம் தொடர்புடைய 37 இடங்களில் நடத்திய சோதனையின் போது கிடைத்த ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Fake for 80 crore rupees Receipts ..! Saravana Stores Annachi who worked under Dillalangadi.!

இந்த ஆய்வில், சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் ரூ.1,000 கோடி வருமானத்தை மறைத்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதோடு, ஆடைகள் மற்றும நகைகள் கொள்முதல் செய்ததில் ரூ.150 கோடி மறைக்கப்பட்டுள்ளதாகவும், போலியான விற்பனை ரசீதுகளை உருவாக்கி ரூ.80 கோடி வருவாயை மறைத்து இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், இந்த சோதனையின் போது ரூ.10 கோடி ரொக்கமும், ரூ. 6 கோடி மதிப்பிலான நகைகளையும் வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

 

புகழ் பெற்ற வணிக வழக்கங்களை கொண்ட சரவணா ஸ்டோர்ஸை முதலில் உருவாக்கிய செல்வரத்தினம் நெல்லையில் பிறந்து சென்னையில் பிழைப்பு தேடி வந்தவர். இங்கு தெரு தெருவாக காபி வியாபாரம் செய்து வந்த சரவண செல்வரத்தினம் தனது கடுமையான முயற்சியால் சரவணா ஸ்டோர்ஸ் என்னும் துணிக்கடை உருவாக்கி அதற்கு தனது இரு சகோதரர்களையும் பங்குதாரர்களாக மாற்றினார். பின்னர் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் சரவணா ஸ்டோர்ஸ் தனது கிளைகளை பரப்பி அசைக்க முடியாத சாம்ராஜ்யமாக மாறியது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios