மசாஜ் செய்.! துணி துவைக்க சொல்லி கட்டாயப்படுத்திய போலீஸ் உயர் அதிகாரி.! கதறிய பெண் காவலர்கள் !!
காவல்துறை உயர் அதிகாரி பெண் காவலர்களை துணி துவைக்கவும், மசாஜ் செய்யவும் செய்ய சொல்லி கட்டாயப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
பீகாரின் புல்வாரி ஷெரீப்பில் அவருக்கு மசாஜ் செய்யவும், துணிகளை துவைக்கவும் பெண் காவலர்களை டிஎஸ்பி கட்டாயப்படுத்தினார்.
பொதுவாக போலீஸ் உயர் அதிகாரிகள் சிலர் தனக்கு கீழ் பணிபுரியும் காவலர்களை தரக்குறைவாக நடத்துவதும், வீட்டு வேலைகளை செய்ய சொல்லுவதும் இன்றளவும் நடந்து வருகிறது. இது போன்ற தவறான செயல்களை யாரும் செய்யக்கூடாது என்று கூறினாலும் இதுபோன்ற செயல்கள் நடந்தவாறு உள்ளது.
இதையும் படிங்க..30 வயசு ஆச்சு.! இன்னும் திருமணம் ஆகாததால் பாதயாத்திரை செல்லும் ஆண்கள் - வினோத சம்பவம் !
பீகார் தலைநகர் பாட்னாவில் அதிர்ச்சிகர சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவத்தில், நான்கு பெண் போலீசார் உட்பட 7 போலீசார், டிஎஸ்பி அளவிலான அதிகாரி ஒருவர் மற்ற காவல்துறை பணியாளர்களை மசாஜ் செய்யவும், துணி துவைக்கவும் கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக பாட்னாவின் மூத்த காவல் கண்காணிப்பாளருக்கு (SSP) புல்வாரி ஷெரீப்பின் துணை-பிரிவு காவல் அதிகாரி (SDPO) சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளை மசாஜ் செய்யவும் மற்றும் அவரது தனிப்பட்ட வீட்டில் அவரது துணிகளை துவைக்கவும் செய்ய வைக்கிறார்கள் என்று புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றஞ்சாட்டப்பட்ட எஸ்.டி.பி.ஓ தங்களை அடிப்பதாகவும், மறுத்தால் சஸ்பெண்ட் செய்வதாக மிரட்டுவதாகவும் போலீசார் குற்றம் சாட்டுகின்றனர். இச்சம்பவம் பீகாரில் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க..நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு - பின்னணி என்ன.? முழு விபரம் இதோ !!