காஞ்சிபுரம் மாவட்டம் மூன்றாம் கால் திருவிழா மண்டபம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் தமிழ்வாணன் (24).  பட்டதாரியான இவர், தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது நண்பர் குணா. இருவரும் மதுபோதையில் பேசிக்கொண்டிருந்த போது திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. 

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தந்தை மற்றும் மகனை போலீசார் தேடி வருகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

காஞ்சிபுரம் மாவட்டம் மூன்றாம் கால் திருவிழா மண்டபம் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் தமிழ்வாணன் (24). பட்டதாரியான இவர், தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரது நண்பர் குணா. இருவரும் மதுபோதையில் பேசிக்கொண்டிருந்த போது திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் குணாவின் தந்தை ரகு அவ்வழியாக வந்தார். அப்போது, மகனிடம் தகராறில் ஈடுபட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து, தமிழ்வாணனை கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் பயங்கர மோதல் ஏற்பட்டு தந்தையும், மகனும் சேர்ந்து தமிழ்வாணனை தாக்கினர். 

மேலும் ஆத்திரமடைந்த இருவரும் அரிவாளால் தமிழ்வாணனை தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டியுள்ளனர். இவரது அலறல் சத்தம் கேட்டதை அடுத்து அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதை பார்த்து அதிர்ச்சியில் இருவரும் அங்கிருந்து தப்பித்தனர். உடனே உயிருக்கு போராடிக்கொண்டிருந்த தமிழ்வாணணை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்து தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தமிழ்வாணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை இருவரை தேடி வருகின்றனர்.