பெற்ற மகளென்றும் பாராமல் மதுவை கொடுத்து குடிக்க வைத்து  தந்தையே வன்புணர்வு செய்த கொடுமை சென்னையில் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. (இறுதி வரியில் பேரதிர்ச்சி காத்திருக்கிறது) 

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த அந்தக் காமக் கொடூரத் தந்தை துபாயில் 4 ஆண்டுகளாக பொறியாளராகப் பணியாற்றி வந்தார். சென்னைக்குத் திரும்பிய அவருக்கு வேலை கிடைக்கவில்லை. அந்த துக்கத்தில் மது அருந்தியுள்ளார். மனைவி வீட்டில் இல்லாத போது மது போதையில் தனது மகளை மது அருந்த கட்டயப்படுத்தி மது புகட்டினார்.

பின்னர் மகளை வன்புணர்வு செய்துள்ளார். வீட்டுக்குத் திரும்பிய மனைவி மகள் ரத்தம் சித்தியபடி மயங்கிக் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியாகி விட்டார். இதுகுறித்து கணவனிடம் கேட்ட போது மகள் கீழே விழுந்து விட்டதாகக் கூறி சமாளித்து இருக்கிறார். உடனே குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், கொடுக்கப்பட்டிருப்பதையும், வன்புணர்வு செய்யப்பட்டு இருப்பதையும் தெரிவித்தனர். இதனையடுத்து மகளின் தாய் கணவர் மீது புகார் அளித்தார். போக்ஸோ சட்டப்படி கணவர் கைது செய்யப்பட்டு உள்ளார். தந்தையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அந்த மகளின் வயது 4. தான் பெற்ற பச்சிளம் குழந்தையை சிதைத்திருக்கிறான் அந்தக் கோடூரக் காமுகன்.