தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே குடிபோதையின் போது ஏற்பட்ட வாய்த்தகராறில் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விஜயாபுரி கிழக்குத் தெருவை சேர்ந்தவர் காளிமுத்து மகன் பெரிய மாரியப்பன் (வயது 55). அதே பகுதியை சேர்ந்தவர் காளியப்பன் மகன் மணிகண்டன் (42). இருவரும் இரவு 10 மணி அளவில் விஜயாபுரி சமுதாயக்கூடம் அருகே மது அருந்தி உள்ளனர். மது அருந்தும் போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வாக்கு வாதம் முற்றி கைகளப்பான நிலையில் பெரிய மாரியப்பன், தான் மறைத்து வைத்து வைத்திருந்த அரிவாளால் மணிகண்டனின் காலில் வெட்டியுள்ளார். அப்போது சுதாரித்துக் கொண்ட மணிகண்டன் அவரது கையில் இருந்த அரிவாளை பிடுங்கி பெரிய மாரியப்பன் கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார். 

முதல்வருடன் நேருக்கு நேர் வாதம் செய்த அரசு ஊழியர்கள்; டென்ஷனான முதல்வரால் பரபரப்பு

இதில் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே பெரிய மாரியப்பன் உயிரிழந்தார். தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெரிய மாரியப்பன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காலில் வெட்டு காயங்களுடன் அப்பகுதியில் பதுங்கி இருந்த மணிகண்டனை காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் மணிகண்டனை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக நாலாட்டின்புதூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாடிக்கையாளர்களின் பணத்தை கையாடல் செய்து ஆன்லைன் ரம்மி விளையாடிய வங்கி மேலாளர் கைது