கணவனின் குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால், ஜேசிபி டிரைவர் தூக்குப் போட்டு இறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தக்கலை அருகே அழகியமண்டபம் பனங்காலவிளையைச் சேர்ந்த அஜித் இவருக்கு வயது 29 இவர் ஜேசிபி ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சஜிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன் கல்யாணம் நடந்தது. 

இவர்கள் அதற்கு முன்பாக சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். ஏற்கனவே திருமணம் ஆனவர் அவரது முதல் கணவர் விபத்து ஒன்றில் இறந்துள்ளார். கணவரின் நண்பரான அஜித்  சஜிதாவுக்கு நிறைய உதவிகள் செய்து வந்துள்ளார். அஜித்  செய்த இந்த உதவியால் இவர்கள் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இந்த நெருக்கம் காதலாக மலர்ந்தது. 

இதனை அடுத்து அஜித் 2ஆம் தாரமாக கல்யாணம் செய்து கொண்டார். அஜித்துக்கு அளவுக்கதிகமாக குடிப்பழக்கம் இருந்தது. இதனால் சஜிதா அவரை கடுமையாக கண்டித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு அஜித் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு தள்ளாடிக் கொண்டு வந்துள்ளார். இதனால் சரிதாவுக்கும் அஜித்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது சஜிதா வீட்டுக்கு வெளியே சென்று அழுது கொண்டு நின்றிருந்தார். அப்போது திடீரென அஜித் வீட்டுக்குள் புகுந்து கதவை சாத்திக் கொண்டு சுனிதாவின் துப்பட்டாவால் ஃ பேனில்  தூக்குபோட்டு தொங்கினார்.

சில நிமிடங்கள் கழித்து உள்ளே சென்ற சஜிதா கணவன் தூக்கில் தொங்கியதை கண்டு அலறி அடித்து ஓடி வந்தார். அப்போது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த  அக்கம் பக்கத்தினர் அஜித்தை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.