வேலூர் அருகே பெண்களை கொடூரமாக கொலை செய்து, அவர்களின் சடலத்துடன் உல்லாசமாக இருந்தேன் என சைக்கோ கொலைக்காரன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். 

வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே உள்ள ராமசாமி நகரை சேர்ந்தவர் நிர்மலா (43), டெய்லர். இவர் கடந்த மாதம், அவரது வீட்டில் தலையில் அம்மிக்கல் போட்டு கொலை செய்யப்பட்டார். நிர்மலா கொலை செய்யப்பட்ட சில நாட்களில், அவரது தோழியான அதே பகுதியை சேர்ந்த இந்திராணி என்பவர் ரயிலில் அடிபட்டு இறந்தார். இந்த தொடர் கொலை சம்பவங்கள் குறித்து, அரக்கோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

 

இந்நிலையில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், நகரி பகுதியை சேர்ந்த சரோஜம்மாள் (65) என்ற மூதாட்டி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தலையில் அம்மிக்கல் போட்டு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக நகரி போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் அரக்கோணம் அடுத்த வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (35) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அதில், ஆனந்தன், சரோஜம்மாளை கொலை செய்துவிட்டு சடலத்துடன் உறவு கொண்டது தெரியவந்தது. இதையடுத்து நகரி போலீசார், அரக்கோணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.  

இதனையடுத்து, அரக்கோணம் போலீசாரும் ஆனந்தனிடம் விசாரணை நடத்தினர். பின்னர், அவர் அளித்த வாக்குமூலத்தை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அதில், அரக்கோணத்தில் நிர்மலாவை கொலை செய்துவிட்டு ஆனந்தன் தப்பியோடியது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனந்தனுக்கும், நிர்மலாவின் தோழி இந்திராணிக்கும் இடையே, பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்தது. இதனால் ஆத்திரமடைந்த இந்திராணி, ஆனந்தனிடம் சொல்லி நிர்மலாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். 

அதன்படி, கடந்த ஒரு மாதத்துக்கு முன் வீட்டில் இருந்த நிர்மலாவின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த ஆனந்தன், அவரது சடலத்துடன் உல்லாசமாக இருந்துள்ளார். இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் இந்திராணியும் போலீசாரின் விசாரணைக்கு பயந்து ரயிலில் அடிபட்டு இறந்தது தெரியவந்தது. மேலும், ஆனந்தன், அரக்கோணத்தில் பல பெண்களை கொலை செய்து சடலத்துடன் உறவு கொண்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, போலீசார் ஆனந்தனை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.