Asianet News TamilAsianet News Tamil

ஆமாம் அந்த ஆள என் வீட்டுக்காரர் காட்டு காட்டுனு காட்டிட்டாரு... ஏன் தெரியுமா? மாவுக்கடை ஓனர் சம்சாரம் கண்ணீர் பேட்டி ...

தோசை மாவு மேட்டர் பிரச்சனை சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருகும் நிலையில் ஜெயமோகனால் அவமானப்படுத்தப்பட்டதாக காவல்துறையில் வாக்குமூலம் அளித்துள்ளார் மாவுக்கடை ஓனரின் சம்சாரம் கீதா, பிரபல புலனாய்வு இதழுக்கு அளித்த கண்ணீர் பேட்டியில் நடந்ததை கூறியுள்ளார்.

Dosa maavu shop owner wife exclusive interview
Author
Nagarkovil, First Published Jun 16, 2019, 11:34 AM IST

தன்னைத் தகாத வார்த்தைகள் சொல்லியபடி தாக்கியதாக ஜெயமோகன் புகார் அளித்திருக்கிறார். வசந்தம் கடை உரிமையாளர் செல்வம், தனது மனைவியை ஜெயமோகன் அநாகரிகமாகத் திட்டினார் என்று புகார் கொடுத்திருக்கிறார். இரு தரப்புப் புகார்களின் மீதும் வழக்குப் பதிவு செய்த நேசமணி காவல் நிலையத்தில். ஜெயமோகனைத் தாக்கிய கடை ஓனர் செல்வத்தை இன்று கைது செய்துள்ளது. 

தோசை மாவு மேட்டர் பிரச்சனை சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருகும் நிலையில் ஜெயமோகனால் அவமானப்படுத்தப்பட்டதாக காவல்துறையில் வாக்குமூலம் அளித்துள்ளார் மாவுக்கடை ஓனரின் சம்சாரம் கீதா, பிரபல புலனாய்வு இதழுக்கு அளித்த கண்ணீர் பேட்டியில் நடந்ததை கூறியுள்ளார்.

காய்கறிகடை, மளிகைகடை, டீ கடை என மூணு கடைகள் வெச்சிருக்கோம்ங்க. வெள்ளிக்கிழமை வந்த ஜெயமோகன்,  அரை லிட்டர் பால், 2 மாவுப்பாக்கெட்டும் கேட்டாரு.  நான் 13 ந்தேதி மாவுதான் சார் இருக்கு. ஃப்ரெஷ் மாவு நாளைக்குத்தான் சார் வரும்னேன். சரி கொடுங்கன்னு வாங்கிட்டுப்போனாரு. என் கணவர் செல்வம் வெளியில போயிட்டு வந்ததும் மளிகைக்கடையை திறந்து பொருட்கள் கொடுத்துக்கிட்டே கடைக்காரப் பையனுடன் கணக்குப் பார்த்துக்கிடிருந்தார். அப்போது திடீர்ன்னு, மாவு பாக்கெட்டோடு  பைக்குல வந்த ஜெயமோகன் ஏண்டி நாயே தே...மவளே... என்ன மாவடி கொடுத்திருக்கன்னு கேட்டுக்கிட்டே மாவு பாக்கெட்டை தூக்கி என்னோட மூஞ்சில வீசினாரு. 

Dosa maavu shop owner wife exclusive interview

எனக்கோ, இப்படி  நம்பள யாருமே பேசினதில்லையேன்னு  ஒருமாதிரி கைக்கால் நடுங்க ஆரம்பிச்சிடுச்சி. நான் சொல்றது பொய்யின்னா பக்கத்துல டீகடையில வேலைபார்க்கிற பையன் இருந்தான். அவனே, என்னக்கா இப்படில்லாம் பேசிட்டாரேன்னு பதற்றத்தோடு சொன்னான்.

அவர், அப்படி பேசினதும் நான் நிலைகுலைஞ்சிபோயிட்டேன். கோபமாகி, 'நீதானே பார்த்து எடுத்துட்டுப்போன? இப்பவந்து இப்படி பேசுற?' ந்ன்னு கேட்டேன். உடனே, தண்ணீர் சொம்பை வேகமாக தள்ளிவிட்டுட்டு உள்ளவந்து என் முடியப்பிடிச்சு இழுக்க முயற்சி பண்ணினார். இதைப்பார்த்து டென்ஷனான என் கணவர் ஜெயமோகனை  புடிச்சு நெட்டித்தள்ள கடையிலிருந்து வெளியில வந்து வெளியே விழுந்துட்டாரு. என் கணவர் அடிச்சது உண்மைதான். அவரும் என்னோட கணவரை திருப்பி அடிச்சாரு. சரின்னு அவரோட, மனைவி எங்க கடையோட ரெகுலர் கஸ்டமர். ரொம்ப நல்லவங்கன்னு நம்பி அவங்கக்கிட்டப் போயி நியாயத்தை சொல்லலாம்னு என்னோட கணவர் போனாரு. ஆனா, அந்தம்மா அவமானப்படுத்தி அனுப்பிட்டாங்க. எனக்கு இதுநாள் வரைக்கும் பி.பியே இல்ல, ஆனா இப்போ பாருங்க பிரஷர் அதிமாகி மூச்சுதிணறல் ஏற்பட ஆரம்பிச்சிடுச்சு. 

எனக்கு ஏற்கனவே, ஹார்ட் பிராப்ளம் இருக்கிறதால எதுவும் ஆகிடக்கூடாதுன்னுதான் பயந்துபோய் ஆசாரிப்பள்ளம் ஜி.ஹெச்சுல அட்மிட் ஆனேன்.  ஒருமணிநேரம் கழிச்சுப்பார்த்தா நான் அட்மிட் ஆகியிருக்குற அதே இடத்துல ரெண்டு மூணு பெட்டு தள்ளி அவரும் அட்மிட் ஆனாரு. எனக்கு ஒண்ணுமே புரியல. அப்புறம்தான் தெரிஞ்சது. நான், கொடுத்த வாக்குமூலத்தை எடுத்துக்காம அவர் கொடுத்த வாக்குமூலத்தை வெச்சு என் கணவரை கைது பண்ணியிருக்காங்க. 

என் கணவர் குடிச்சிட்டு அடிச்சதா சொல்றாங்க. உண்மை என்னன்னா? அவரு குடிப்பாரு இல்லைன்னு சொல்லல. ஆனா, கடைக்கு வரும்போது சிகரெட், குடியை தொடவே மாட்டாரு. கடையை கோயில்மாதிரி நினைக்கிறவரு. கடை மூடினபிறகுதான் குடிப்பார். அந்தமாதிரிதான், பிரச்சனையெல்லாம் முடிஞ்சபிறகு வழக்கம்போல் குடிச்சிட்டார். ஆனா, அரெஸ்ட் பண்ணினதும் போதையில இருந்ததால ஜெயமோகனிடம் சண்டபோதும் குடிச்சிருந்த மாதிரி புரளியை கிளப்பி விட்டுட்டாங்க.  அந்தாளால எங்க மானமே போயிடுச்சு.

அன்னைக்கு வந்த ஆளு மாவு பிடிக்கல. காச கொடுன்னு கேட்ட்டிருந்தா கொடுத்திருப்பேன். இப்படி அசிங்க அசிங்கமா பேசலாமா? எனக்கு அவரை யார்ன்னுக்கூட தெரியாது. ஆனா, நீங்களே சொல்லுங்க... என் கணவருக்கு அவரைத் தெரியுமாம். தெரிஞ்சிருந்தும் அடிச்சார்ன்னா அதுக்குக்காரணம், ஒரு மனைவியை கண்ணு முன்னாடி அப்படி தரக்குறைவா பேசினா எந்தக்கணவன் தான் பார்த்துக்கிட்டு சும்மா நிற்கமுடியும்?  என கண்கலங்கிக்கொண்டே பேசியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios