காதலி வேறு ஒரு  இளைஞனுடன் தொடர்பில் இருப்பதாக  சந்தேகித்த காதலன் அந்தப் பெண்ணின் கழுத்தை அறுத்துள்ள சம்பவம்  நடந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் வேலூர் மாவட்டம் திருவலத்தில் அரங்கேறியுள்ளது. இந்நிலையில் அந்த இளைஞனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.  

காதலி வேறு ஒரு இளைஞனுடன் தொடர்பில் இருப்பதாக சந்தேகித்த காதலன் அந்தப் பெண்ணின் கழுத்தை அறுத்துள்ள சம்பவம் நடந்துள்ளது. இந்த கொடூர சம்பவம் வேலூர் மாவட்டம் திருவலத்தில் அரங்கேறியுள்ளது. இந்நிலையில் அந்த இளைஞனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, இதை தடுக்க காவல்துறையும் அரசும் எத்தனை நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. காதலிப்பதாக கூறி கற்பழித்து மோசடி செய்வது, காதலிக்க மறுக்கும் பெண்களின் முகத்தில் ஆசிட் வீசுவது, காதலித்து திருமணம் செய்து வரதட்சணை கேட்டு கொடுமை செய்வது போன்ற எண்ணற்ற கொடூரங்கள் அரங்கேறி வருகிறது. இந்த வரிசையில் காதலி மீது சந்தேகம் அடைந்த காதலன் அந்தப் பெண்ணின் கழுத்தை அறுத்துள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது.

இதையும் படியுங்கள்: அடத்தூ... பயிற்சிக்கு வந்த ஐஐடி மாணவியை அறைக்கு இழுத்துச் சென்று உடலுறவு... ஐஏஎஸ் அதிகாரி செய்த அசிங்கம்..

முழு விவரம் பின்வருமாறு:- வேலூர் மாவட்டம் குப்பாத்தாமேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (20) வேலூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் ஆர்த்தோ டெக்னீசியனாக பயின்று வருகிறார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 18 வயது யாஷினி என்ற பெண்ணை இவர் காதலித்து வந்தார். அவர் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மெடிக்கல் ரெக்கார்ட் படித்து வருகிறார், இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர், இந்நிலையில் காதலர்கள் இருவரும் அடிக்கடி தகராறில் ஈடுபடுவது வழக்கம், இந்நிலையில் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள சதீஷ்குமாரின் குடும்பத்தினர் பெண்கேட்டு சென்றனர்.

இதையும் படியுங்கள்: கொள்ளையடித்த பணத்தில் ஜாலியாக விமான பயணம்!சிறுவர்களின் உதவியோடு திருடிய வட மாநில கும்பலை தட்டி தூக்கிய போலீஸ்

ஆனால் அவரது பெற்றோர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை, அதே நேரத்தில் அந்தப் பெண் வேறு ஒருவரை காதலிப்பதாக சதீஷ்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை கல்லூரி செல்ல அந்தப் பெண் திருவலம் பேருந்து நிலையத்திற்கு வந்தார். அப்போது காதலியைச் சந்திக்க சதீஷ் வந்தார், இருவரும் அருகில் இருந்த பிள்ளையார் கோவில் எதிரில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது காதல் விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது, அதில் ஆத்திரமடைந்த சதீஷ் தான் கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் திடீரென காதலியின் கழுத்தில் குத்தினார் . 

அதில் அந்தப்பெண் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அலறி அடித்து ஓடினர், அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் சதீஷ் மாயமானார். பின்னர் அந்த பெண்ணை மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அந்த பெண் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து விரைந்து வந்த திருவலம் போலீசார் சதீஷ்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஏற்கனவே இருவருக்கும் ரகசிய திருமணம் நடந்து விட்டதாகவும், இந்நிலையில் யாஷினிக்கு வேறு ஒரு இளைஞருடன் தொடர்பு ஏற்பட்டு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்ட நிலையில், தான் அவரின் கழுத்தை அறுத்து தாகவும் அந்த இளைஞர் கூறினார். போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.