Asianet News TamilAsianet News Tamil

திமுக வட்டச்செயலாளர் செல்வம் கொலை வழக்கில் நீளும் மர்மம்.. அடுத்தடுத்து அரங்கேறும் பகீர் சம்பவங்கள்..!

கொலை வழக்கில் சம்மந்தமே இல்லாத ஒருவர் தேடப்பட்டு வரும் நபரின் பெயராக இருப்பதால் மாறி சரணடைந்து தேடப்பட்டு வரும் நபரை காப்பாற்ற இந்த முயற்சியா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

dmk madipakkam selvam murder case.. another person surrendered
Author
Chennai, First Published Mar 11, 2022, 7:25 AM IST

திமுக வட்டச்செயலாளர் மடிப்பாக்கம் செல்வம் கொலை வழக்கில் தொடர்பில்லாத நபர் ஒருவர் நீதிமன்றத்தில் சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 திமுக வட்டச்செயலாளர் கொலை வழக்கு

சென்னை, மடிப்பாக்கத்தைச் சேர்ந்த திமுக வட்டச்செயலாளர் செல்வம் பிப்ரவரி 1ம் தேதி ராஜாஜி பிரதான சாலையில்  தனது ஆதரவாளர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை  சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  இதனையடுத்து, அக்கும்பல் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியது. இந்த கொலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட போட்டி காரணமாக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினர். 

இதையும் படிங்க;- திமுக வட்ட செயலாளர் செல்வம் கொலை வழக்கு.. கூலிப்படையை ஏவியது இவரா? வெளியான பரபரப்பு தகவல்..!

dmk madipakkam selvam murder case.. another person surrendered

முக்கிய குற்றவாளியை தேடும் போலீஸ்

இதனையடுத்து, விக்கிரவாண்டி டோல்கேட்டில் கூலிப்படையை சேர்ந்த விக்னேஷ், புவனேஷ்வர், சஞ்சய், விக்னேஷ், கிஷோர் குமார் ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அருண் என்பவர் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இவர்களிடம் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் கூலிப்படையை இயக்கியது வியாசர்பாடி முருகேசன் என்ற ரவுடி என்பது தெரியவந்தது. தற்போது தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

இதையும் படிங்க;- திமுக வட்டச்செயலாளர் கொலை வழக்கு.. கூலிப்படையை ஏவி 30 லட்சம் பேரம் பேசியது இவரா? வெளியான அதிர்ச்சி தகவல்.!

dmk madipakkam selvam murder case.. another person surrendered

சம்மந்தமே இல்லாத நபர் நீதிமன்றத்தில் சரண்

முக்கிய குற்றவாளியை தேடிவந்த நிலையில் வியாசர்பாடியை சேர்ந்த சதீஷ் என்பவர் தாம்பரம் நீதிமன்றத்தில் திடீரென சரணடைந்துள்ளார். விசாரணையில், கூலிப்படை தலைவனான முருகேசனும், சதீஷும் தனது நண்பர்கள் எனவும், அதனால் போலீசார் தன்னை தேடுவதாக ஏற்பட்ட அச்சத்தில் சரணடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

dmk madipakkam selvam murder case.. another person surrendered

இதையடுத்து, வழக்கிற்கும் சதீஷிற்கும் தொடர்பில்லை எனக்கூறி நீதிமன்றம் அவரை விடுவித்தது. தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியாக பார்க்கப்படும் கூலிப்படை தலைவன் முருகேசனை பிடித்தால்தான் கொலைக்கான முழுமையான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். கொலை வழக்கில் சம்மந்தமே இல்லாத ஒருவர் தேடப்பட்டு வரும் நபரின் பெயராக இருப்பதால் மாறி சரணடைந்து தேடப்பட்டு வரும் நபரை காப்பாற்ற இந்த முயற்சியா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios