கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தேர்தல் சம்பந்தமாக செல்வம் வெட்டிக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்போன் மூலம் ஆய்வு செய்ததில் கொலையாளிகள் சென்னையில் இருந்து திருச்சி வழியாக தப்பி செல்வது தெரியவந்தது.
சென்னை மடிப்பாக்கம் திமுக வட்ட செயலாளர் செல்வம் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கூலிப்படை தலைவனை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
சென்னை மடிப்பாக்கம் பெரியார்நகர் 6வது தெருவை சேர்ந்தவர் செல்வம்(35). இவர் 188வது வார்டு திமுக வட்ட செயலாளராக இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு இரவு செல்வத்துக்கு சால்வை அணிவிப்பது போல் 3 இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த செல்வம் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தேர்தல் சம்பந்தமாக செல்வம் வெட்டிக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், கொலை நடந்த இடத்தில் கிடைத்த செல்போன் மூலம் ஆய்வு செய்ததில் கொலையாளிகள் சென்னையில் இருந்து திருச்சி வழியாக தப்பி செல்வது தெரியவந்தது.
அதன்பேரில் சமயபுரம் அருகே ஒரு காரை மடக்கி பிடித்தனர். அதில், தூத்துக்குடி மாவட்ட அதிமுக அம்மா பேரவை செயலாளர் ராதாகிருஷ்ணன் கைதானார். இதனையடுத்து, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் செல்வத்துக்கும் முன் விரோதம் இருந்தது உண்மைதான். ஆனால், கொலைக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என தெரிவித்துவிட்டார். இதனையடுத்து, விக்கிரவாண்டி டோல்கேட்டில் கூலிப்படையை சேர்ந்த விக்னேஷ், புவனேஷ்வர், சஞ்சய், விக்னேஷ், கிஷோர் குமார் ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதில் செல்வத்தை கொலை செய்தது உறுதியானது.

இந்த 5 பேரிடமும் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் கூலிப்படையை இயக்கியது வியாசர்பாடி முருகேசன் என்ற ரவுடி என்பது தெரியவந்தது. வியாசர்பாடி முருகேசன் தான் செல்வத்தை கொலை செய்ய உத்தரவிட்டதின் பேரில் கொலை செய்ததாக கூலிப்படையினர் கூறியுள்ளனர். எனவே வியாசர்பாடி முருகேசன் பிடிபட்டால் தான் செல்வத்தை கொலை செய்ய உத்தரவிட்டது யார் என்பது தெரியும். கொலைக்கான உண்மையான காரணமும் தெரிய வரும்.