சென்னை மடிப்பாக்கம் 188-வதுவட்ட திமுக செயலாளராக இருந்தவர் செல்வம் (45). இவர் கடந்த 1ம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த 6 கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியது. இந்த கொலை தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில் கடந்த பிப்ரவரி 3ம் தேதி கூலிப்படையைச் சேர்ந்த 5 பேர் விக்கிரவாண்டியில் வைத்து போலீசார் கைது செய்து அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மடிப்பாக்கம் திமுக வட்டச்செயலாளர் செல்வம் கொலை செய்ய பெண் ஒருவர் 30 லட்சம் பேரம் பேசியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மடிப்பாக்கம் 188-வதுவட்ட திமுக செயலாளராக இருந்தவர் செல்வம் (45). இவர் கடந்த 1ம் தேதி இருசக்கர வாகனத்தில் வந்த 6 கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியது. இந்த கொலை தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில் கடந்த பிப்ரவரி 3ம் தேதி கூலிப்படையைச் சேர்ந்த 5 பேர் விக்கிரவாண்டியில் வைத்து போலீசார் கைது செய்து அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த கொலை வழக்கில் மேலும் சிலரை தேடி வருகின்றனர். வியாசர்பாடியை சேர்ந்த அருண் என்பவரையும் போலீசார் தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்து அருண் தலைமறைவாக இருந்தார். இந்நிலையில், எழும்பூர் 13-வது குற்றவியல் நீதிமன்றத்தில் அருண் நேற்று சரணடைந்தார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், கூலிப்படை தலைவனான முருகேசனையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதனிடையே, கூலிப்படை தலைவன் முருகேசனுக்கு பெண் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு அசைன்மென்ட் கொடுத்ததாக விசாரணையில் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அசைன்மென்ட் கொடுத்த அந்த பெண் சென்னையில் பிரபல ரவுடி ஒருவரின் மனைவி என்பதும், முன்னதாக ரவுடியின் மனைவியை தொடர்பு கொண்டு பேசியவர் சென்னை செம்பாக்கத்தைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரின் மனைவி என்பதும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொலைக்காக 30 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கூலிப்படை தலைவன் முருகேசன் கைது செய்யப்படும் பட்சத்தில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாக வாய்ப்புள்ளது. கூலிப்படையை ஏவிய இரு பெண்களும் வழக்கில் சேர்க்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.