சென்னை திருவொற்றியூரில் அடுத்த விம்கோநகர் பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன். இவர் திமுகவில் 5வது வார்டு வட்ட பிரதிநியாக உள்ளார். இவரது மகன் காமராஜ்(35). இருவரும் திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆர்.வி.என்ஜினீயரிங் என்ற பெயரில் மாநகராட்சி ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வந்தார்.

சென்னையில் திமுக பிரமுகரின் மகன் பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாமூல் ரவுடிகளால் கொலை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சென்னை திருவொற்றியூரில் அடுத்த விம்கோநகர் பகுதியை சேர்ந்தவர் விவேகானந்தன். இவர் திமுகவில் 5வது வார்டு வட்ட பிரதிநியாக உள்ளார். இவரது மகன் காமராஜ்(35). இருவரும் திருவொற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆர்.வி.என்ஜினீயரிங் என்ற பெயரில் மாநகராட்சி ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், வழக்கம் போல காமராஜ் நேற்று காலை அவரது அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் முகமூடி அணிந்து உள்ளே நுழைந்தனர். 

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காமராஜ் அலறி கூச்சலிட்டு தப்பிச்செல்ல முயன்றார். ஆனால், அந்த கும்பல் அலுவலகத்தில் வைத்தே சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பித்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய காமராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். முதற்கட்ட விசாரணையில் எண்ணூர் பஜார் பகுதியில் இவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நூலகம் கட்டி வருகிறார்கள். அந்த பணியில் காமராஜ் ஈடுபட்டு இருந்த போது அப்பகுதியைச் சேர்ந்த ரவுடிகள் சிலர் அவரிடம் மாமூல் கேட்டு மிரட்டினர். ஆனால் அவர் கொடுக்க மறுத்ததால் வெட்டிக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். கொலை செய்யப்பட்ட காமராஜிக்கு யாமினி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.