ஏடிஎம்மில் தொடர் கொள்ளை..! வங்கி அதிகாரிகளுக்கு புதிய ஐடியா கொடுத்த டிஜிபி சைலேந்திரபாபு
திருவண்ணாமலை ஏடிஎம் மையத்தில் நடைபெற்ற தொடர் கொள்ளையையடுத்து வங்கி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய டிஜிபி சைலேந்திர பாபு, வங்கி மற்றும் ஏடிஎம்மில் உள்ள பணத்தை கண்காணிக்க மறைமுக கேமராக்கள் பொருத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ஏடிஎம் தொடர் கொள்ளை
சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள நகைக்கடையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதற்கு அடுத்த தினமே திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 4 ஏடிஎம்களில் இருந்து 75 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் திருவண்ணாமலை, வேலூர் மற்றும் ஆந்திர மாநில எல்லையோர பகுதிகளிலும் முகாமிட்டு விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை நகை கடையில் கொள்ளை அடிக்க பயன்படுத்தி கார் பறிமுதல்.! கொள்ளையர்களை நெருங்கிய போலீஸ்
ஏடிஎம் இயந்திரத்திற்கு தீ வைப்பு
ஏடிஎம் கொள்ளை சம்பவம் நடந்த பகுதி, மாவட்ட எல்லைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் இந்த கொள்ளையில் தொழில்நுட்பத்தில் கை தேர்ந்த ஆட்களே ஈடுபட்டதாகவும் தகவல் வெளியானது. கியாஸ் கட்டர் கொண்டு ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை அடித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. தங்களது அடையாளம் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக கொள்ளையர்கள் ஏடிஎம் இயந்திரத்திற்கு தீ வைத்துள்ளனர். இதில், கேமிரா மற்றும் ஹார்ட் டிஸ்குகள் சேதமடைந்துள்ளன.
வங்கி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
இதனையடுத்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, 51 வங்கி பொது மேலாளர்கள் மற்றும் பொறுப்பு பாதுகாப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது வங்கி மற்றும் ஏடிஎம்களில் உள்ள பணத்தை கண்காணிக்க மறைமுக கேமராக்களை பொருத்த வேண்டும். முகத்தை அடையாளம் காண உதவும் மென்பொருளுடைய கேமராக்களை ஏடிஎம்களிலும் பொருத்த வேண்டும். ஏடிஎம்கள் உடைக்கப்படும் போது எச்சரிக்கை மணி ஒலிக்க வழிவகை செய்ய வேண்டும். ஏடிஎம் மையத்திற்கு அருகில் உள்ள காவல் நிலையத்திலும் எச்சரிக்கை மணி ஒலிக்குமாறு அமைக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபு வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்