சென்னை நகை கடையில் கொள்ளை அடிக்க பயன்படுத்தி கார் பறிமுதல்.! கொள்ளையர்களை நெருங்கிய போலீஸ்
சென்னை பெரம்பூர் பகுதியில் நகைக்கடையின் ஷட்டரை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் முதல் கட்டமாக கொள்ளை அடிக்க பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ள போலீசார் கொள்ளையர்களை நெருங்கி விட்டதாகவும் கூறியுள்ளனர்.
நகைக்கடையில் கொள்ளை
சென்னை பெரம்பூரில் பிரபல நகைக்கடையில் கடையின் ஷட்டரை வெல்டிங் மூலம் உடைத்து 5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கொளத்தூர் பகுதியில் இயங்கி வரும் பிரபல நகைக்கடையான ஜே எல் கோல்டு ஹவுஸ் என்ற நகைக்கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் ஷட்டரை கடந்த 3 தினங்களுக்கு முன்பாக மர்ம கும்பல் வெல்டிங் மிஷினால் அறுத்து உடைத்தது. இதனையடுத்து நகை கடையில் வைத்திருந்த ஒன்பது கிலோ தங்க நகை மற்றும் 20 லட்ச ரூபாய் மதிப்பிலான வைரக்கல் நகைகள் கொள்ளையடித்து சென்றது.
வெளிமாநிலங்களுக்கு சென்ற போலீசார்
இதனையடுத்து சம்பவம இடத்திற்கு வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட்னர். அப்போது கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவு செய்யப்பட்ட ஹார்ட் டிஸ்கையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசாருக்கு பெரும் தலைவலி ஏற்பட்ட நிலையில், சாலையில் இருந்த கண்காணிப்பு கேமரா மூலம் கொள்ளையர்களை தேடப்பட்டு வந்தது. இதில் முதல்கட்டமாக கொள்ளையர்கள் பயன்படுத்திய காரின் வீடியோ வெளியிடப்பட்டது. இந்தநிலையில்,9 தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
கொள்ளையடிக்க பயன்படுத்திய கார் பறிமுதல்
தனிப்படை போலீசார் ஹைதராபாத் மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களுக்கு சென்றுள்ளனார். முதல் கட்டமாக கொள்ளை அடிக்க பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ள போலீசார் நகைக்கடை கொள்ளையர்களை நெருங்கி விட்டதாகவும் கூறியுள்ளனர். மேலும் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்திய குற்றவாளிகள் குறித்து சில தடயங்கள் கிடைத்திருப்பதாக கூறியுள்ளனர்.
இதையும் படியுங்கள்