சந்தேகத்தால் மனைவியைக் கதறக் கதற கொன்ற மருத்துவர்! ஆயுள் தண்டனைக்கு வழிவகுத்த குழந்தையின் வாக்குமூலம்!
சடலமாகக் கிடைந்த தனுஜாவுக்கு உடலில் 37 காயங்கள் இருந்ததாக போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர். கொலைக்குப் பிறகு உமேஷ் போலீஸை அழைத்து சரணடைந்தார்.
நான்கு வயதில் தன் தாயின் கொலையை நேரில் பார்த்த சிறுவன், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு விசாரணை நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தால், சிறுவனின் தந்தைக்கு ஆயுள் தண்டனை கிடைத்துள்ளது.
மும்பை தாதர் பகுதியைச் சேர்ந்த பல் மருத்துவர் உமேஷ் போபாலே. ஏற்கெனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவரான இவர், 2009ஆம் ஆண்டு தனுஜா போபாலே என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. ஆனால், மனைவி மீது சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்தார்.
36 வயதாடன தனுஜா போபாலே கணக்காளராக பணிபுரிந்து வந்தார். இரவில் நீண்ட நேரம் வேலை பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பியதால், தனுஜாவுக்கு இன்னொருவருடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக உமேஷ் சந்தேகம் அடைந்துள்ளார். இதனால், குழந்தைக்கு அப்பா யார் என்று கேட்டு கொடுமைப்படுத்தி வந்திருக்கிறார். குழந்தைக்கு தந்தை யார் என்பதை அறிவதற்காக தனுஜாவுக்கு டிஎன்ஏ சோதனையும் செய்ய வைத்துள்ளார். முடிவில், குழந்தைக்கு தந்தை உமேஷ் தான் என்பது உறுதியானது. இந்த பிரச்சினையை அடுத்த இருவரும் விவகாரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
1ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி பாலியல் வன்கொடுமை: பள்ளி ஹாஸ்டலில் நடந்த கொடூரம்!
தனுஜா தன் தாய்மாமா வீட்டில் குழந்தையுடன் வசித்து வந்த நிலையில், 2016ஆம்ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி வீட்டுக்கு வந்த உமேஷ் தனுஜாவை வெறியுடன் தாக்கி கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். சடலமாகக் கிடைந்த தனுஜாவுக்கு உடலில் 37 காயங்கள் இருந்ததாக போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர். கொலைக்குப் பிறகு உமேஷ் போலீஸை அழைத்து சரணடைந்தார்.
நான்கு ஆண்டுகளாக நடைபெற்றுவந்த இந்த வழக்கில் அப்போது 4 வயதாக இருந்த குழந்தை கொலை நேரில் பார்த்ததாகக் கூறப்படுகிறது. விசாரணையின்போது, குழந்தையின் வாக்குமூலமும் பெறப்பட்டுள்ளது. அதில், என் அப்பா தான் அம்மாவை கத்தியால் குத்திக் கொன்றார் என்று குழந்தை அளித்த வாக்குமூலத்தால் உமேஷ் குற்றவாளி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
"தனது தந்தை தாயை கத்தியால் தாக்கியபோது, நான் கத்தவில்லை. ஆனால் என் இதயத்தில் ஏதோ (படபடப்பு) ஆனதை உணர்ந்தேன்" என்று குழந்தை கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்து வந்த விசாரணை நீதிமன்றம், உமேஷுக்கு ஆயுள் தண்டனை விதித்ததுடன் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது.
உல்லாச வாழ்க்கை ஆசைப்பட்டு கள்ளக்காதல் ஜோடி செய்கிற வேலையை பாத்தீங்களா.. அலேக்கா தூக்கிய போலீஸ்.!