1ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி பாலியல் வன்கொடுமை: பள்ளி ஹாஸ்டலில் நடந்த கொடூரம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

A minor girl who studying class 1 raped at school hostel in Chhattisgarh

சத்தீஸ்கரின் பழங்குடியினர் ஆதிக்கம் நிறைந்த சுக்மா மாவட்டத்தில் உள்ள பள்ளியின் விடுதியில் அடையாளம் தெரியாத ஒருவரால் 1ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 8 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

அம்மாநிலத்தில் உள்ள எர்ரபோர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போர்டா கேபின் பள்ளியில் கடந்த 22ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றதாக சுக்மா காவல் கண்காணிப்பாளர் கிரண் ஜி சவான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புகார் பெறப்பட்டதையடுத்து, கடந்த 24ஆம் தேதி (நேற்று) வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் காதலியை வேறு ஒருவருடன் பார்த்த காதலன்.. மைனர் பெண்ணை கத்தியால் குத்தி, கற்பழித்த கொடூரம்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தை உள்ளடக்கிய பஸ்டர் பிரிவில், நக்சல்களால் பாதிக்கப்பட்ட கிராமங்களை சேர்ந்த குழந்தைகள் படிப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புப் பள்ளிகள்தான் போர்டா கேபின் பள்ளி என்றழைக்கப்படுகிறது.

அப்பள்ளியின் விடுதியில் தங்கி 1ஆம் வகுப்பு படிக்கும் 6 வயதான பாதிக்கப்பட்ட சிறுமி, இந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கடந்த 23ஆம் தேதி தெரிவித்துள்ளார். அதனைத்தொடர்ந்து, விடுதி கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மறுநாள் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் பேரில், மறுநாள் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 376 ஏபி (12 வயதுக்குட்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்வது), 456 (அத்துமீறல்), 363 (கடத்தல்) 324 (வேண்டுமென்றே காயப்படுத்துதல்) மற்றும் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போக்ஸோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுக்மா காவல் கண்காணிப்பாளர் கிரண் ஜி சவான் தெரிவித்துள்ளார்.

சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து, விசாரிக்க சுக்மா கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கவுரவ் மண்டல் தலைமையில் 8 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் சுக்மா சிறப்பு சிறார் காவல் பிரிவு துணைக் காவல் கண்காணிப்பாளர் பருல் கண்டேல்வாலும் இடம்பெற்றுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர்களை அடையாளம் காணும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் சுக்மா காவல் கண்காணிப்பாளர் கிரண் ஜி சவான் தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios