ஓரின சேர்க்கைக்கு மறுப்பு.. சிறுவனை தண்ணீரில் வைத்து துடிதுடிக்க காமக்கொடூரன் என்ன செய்தார் தெரியுமா?
புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது சகோதரியின் மகனை தத்தெடுத்து வளர்த்து வந்தார். அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார்
ஓரின சேர்க்கைக்கு மறுத்த சிறுவனை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது சகோதரியின் மகனை தத்தெடுத்து வளர்த்து வந்தார். அப்பகுதியில் உள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஜனவரி 17-ம் தேதி திடீரென மாயமான அந்த சிறுவன் மறுநாள் அதிகாலையில் அங்குள்ள வாய்க்காலில் நிர்வாண நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிறுவனின் உடலில் அங்காங்கே காயம் இருந்தன.
இதையும் படிங்க: கள்ளக்காதலுடன் உல்லாசமாக இருந்த போது ஓயாமல் அழுத குழந்தை.. கடுப்பான தாய்.. வெறியில் என்ன செய்தார் தெரியுமா?
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் அருள்ராஜ் என்பவரிடம் விசாரணை நடத்த முற்பட்ட போது அவர் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது. ஒரு வழியாக அவரை பிடித்து விசாரித்ததில், அருள்ராஜ் செல்போனில் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு குளித்துக் கொண்டிருந்த சிறுவனை நைசாக பேசி வரவழைத்து செல்போனில் ஆபாச படத்தை காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: செம்பரம்பாக்கம் ஏரியில் தலை இல்லாமல் 6 துண்டுகலாக மிதந்த உடல்கள்! கொலை செய்யப்பட்டது யார்? வெளியான பகீர் தகவல்
மேலும், ஓரினச்சேர்க்கைக்கு வலுக்கட்டாயமாக அழைத்தபோது சிறுவன் மறுத்து அருள்ராஜின் கையை கடித்துவிட்டு ஓடியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த காலால் எட்டி உதைத்தில் கூர்மையான கம்பி கழுத்தில் குத்தியது. ரத்த வெள்ளத்தில் சரிந்த சிறுவன் மயங்கினார். இந்த சம்பவம் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக, சிறுவனை வாய்க்கால் தண்ணீருக்குள் மூழ்கடித்து கொலை செய்துவிட்டு அருள்ராஜ் தப்பியோடியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அருள்ராஜ் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.