மகாராஷ்ட்ரா மாநிலம் தானே பகுதியில் வசித்து வருபவர் ராணாகுமார். இவருக்கு திருமணம் ஆகி ராஷ்மி என 14 வயது பெண் குழந்தை உள்ளது. இதனிடையே கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மனைவி 7 ஆண்டுகளுக்கு முன் ராணாகுமாரை பிரிந்து சென்று விட்டார். அவரது மகள் ராஷ்மி தநதையுடன் வசித்து வந்துள்ளார்..

இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளாகத் தந்தையே சிறுமியைப் பல்வேறு முறையில் தொடர்ந்து கற்பழித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த சிறுமி, தந்தையின்  பாலியல் துன்புறுத்தலை பொறுக்க முடியாமல் அருகில் உள்ள வீட்டாரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த  14 வயது சிறுமியுடன் அண்டை வீட்டார் காவல்துறையில் புகார் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து ராணாகுமாரை போலீசார் கைது செய்து முட்டிக்கு முட்டி தட்டி சிறையில் அடைத்தனர். அவரின் மீது ஐபிசி பிரிவு 376-ன் கீழும், போக்ஸோ சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.