நிறைமாத கர்ப்பிணியைப் பெத்தவங்களே கொன்ற கொடுமை! பொய் சாட்சி சொல்ல மறுத்ததால் நடந்த வெறிச்செயல்!

நீதிமன்றத்தில் ராகுல் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக வாக்குமூலம் அளிக்குமாறு பெற்றோர் வற்புறுத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பெண் காதலனுக்கு எதிராக சாட்சி கூற முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

Couple Kills Pregnant Daughter For Refusing To Frame Lover For Rape: Cops

உத்தர பிரதேசத்தில் எட்டு மாத கர்ப்பிணிப் பெண்ணை பெற்றோரே கழுத்தை நெரித்து கொன்று ஆற்றில் வீசி எறிந்த அதிர்ச்சிச் சம்பவம் அரங்கேறியுள்ளது.

கொல்லப்பட்ட 19 வயதுடைய பெண் ராகுல் என்பவரைக் காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த அக்டோபர் 2022ஆம் தேதி வீட்டை விட்டு ஓடிவிட்டனர். பெண்ணின் பெற்றோர் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் இருவரையும் கண்டுபிடிக்க தேடும் பணி தொடங்கியது. விசாரணையில் 2022 டிசம்பரில் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டனர். அப்போது ராகுல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் அந்தப் பெண் சனிக்கிழமை தனது வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டியிருந்தது. ஆனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. வெள்ளிக்கிழமை இரவே அந்தப் பெண்ணை பெற்றோரே கொன்றுவிட்டதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1! செப். முதல் வாரத்தில் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்!

Couple Kills Pregnant Daughter For Refusing To Frame Lover For Rape: Cops

"நீதிமன்றத்தில் ராகுல் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக வாக்குமூலம் அளிக்குமாறு பெற்றோர் வற்புறுத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பெண் காதலனுக்கு எதிராக சாட்சி கூற முடியாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த அவரது பெற்றோர் பெற்ற மகளையே கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளனர்" என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ஷாப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோய்லா கிராமத்தில் உள்ள ஆற்றில் அவரது உடல் வீசப்பட்டதாகவும் போலீசார கூறியுள்ளனர். பெண்ணைக் கொன்றது யார் என்று விசாரணை நடத்தியபோது, பெற்றோர் தாங்களே குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து பெற்றோர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் பெண்ணின் பெற்றோர் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்கிறார் காவல்துறை கண்காணிப்பாளர் (எஸ்பி) சஞ்சீவ் சுமன்.

Credit card Tips: கிரெடிட் கார்டு பேலன்ஸ் தொகையை டிரான்ஸ்பர் செய்வது எப்படி? கடனை நிர்வகிக்க செம ஐடியா இதோ!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios