Asianet News TamilAsianet News Tamil

ஆட்டோ ஓட்டுனருக்கும் பொண்டாட்டிக்கும் லிங்க்.? கணவனுக்கு ஏற்பட்ட விபரீத சந்தேகம்.. சரமாரியாக வெட்டி கொடூரம்.

இந்த நிலையில் சிவகுமார் குடிபோதையில் அவ்வப்போது கோயம்பேடு பகுதிக்கு வந்து நித்யாவிற்கு தொந்தரவு அளித்து வந்ததாக கூறப்படுகிறது, மேலும் நித்யா பிரிந்து வாழ்வதால் சிவகுமார் நித்யா மீது சந்தேகம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

Contact to Auto Driver and Wife.? Suspicious suspicion of the husband .. Auto Driver Attacked By Husband.
Author
Chennai, First Published Jul 6, 2021, 11:03 AM IST

பிரிந்து வாழும் மனைவி மீது ஏற்பட்ட சந்தேகத்தால் சாலையில் சென்ற ஆட்டோ ஓட்டுநரை சரமாரியாக கத்தியால் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். பழைய வண்ணாரப்பேட்டை சேர்ந்தவர் சிவகுமார் இவரது மனைவி நித்யா இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நித்தியா சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள தனது தாய் வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக தங்கி சிறு சிறு வேலை செய்து வாழ்ந்து வருகிறார். 

Contact to Auto Driver and Wife.? Suspicious suspicion of the husband .. Auto Driver Attacked By Husband.

இந்த நிலையில் சிவகுமார் குடிபோதையில் அவ்வப்போது கோயம்பேடு பகுதிக்கு வந்து நித்யாவிற்கு தொந்தரவு அளித்து வந்ததாக கூறப்படுகிறது, மேலும் நித்யா பிரிந்து வாழ்வதால் சிவகுமார் நித்யா மீது சந்தேகம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோயம்பேடு நூறடி சாலை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது சிவகுமார் முழு குடிபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். சிவகுமாரிடம் இருந்து தப்பிப்பதற்காக சாலையில் சென்று கொண்டு இருந்த ஆட்டோவை மடக்கி அதில் நித்தியா ஏற முயற்சி செய்துள்ளார்.

Contact to Auto Driver and Wife.? Suspicious suspicion of the husband .. Auto Driver Attacked By Husband.

இதனால் ஆத்திரமடைந்த சிவகுமார் ஆட்டோ ஓட்டுநரை தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்து முகம் முதுகு உள்ளிட்ட பல இடங்களில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆட்டோ ஓட்டுநரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.சிவக்குமாரை பிடிக்க வந்த பொதுமக்களையும் சிவகுமார் தாக்க முயற்சி செய்துள்ளார். இதனால் அச்சத்தில் பொதுமக்கள் சிதறி ஓடினர், பின்னர் அங்கிருந்தவர்கள்  காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் கோயம்பேடு போலீசார் சம்பவ இடத்திற்க்கு நேரில் வந்து சிவகுமார் கைது செய்து இன்று சிறையில் அடைத்தனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios