கள்ளக்காதல் மனைவியில் கள்ள உறவால் ஆத்திரம் அடைந்த கணவர் அவரை கழுத்து அறுத்து படுகொலை செய்த சம்பவம் குறித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் கொண்டலாம்பட்டி காவல்நிலையம் அருகே, சேலம் & கரூர் ரயில் பாதை உள்ளது. இந்த தண்டவாளத்தின் அருகில், 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கழுத்து அறுக்கப்பட்ட சடலம் கிடந்தது. 

இதுகுறித்து தகவல் அளித்த கொண்டலாம்பட்டி போலீசார்  பொதுமக்கள். ஆய்வாளர் புஷ்பராணி மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண் கொண்டலாம்பட்டி புத்தூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த முனியம்மாள் என்பது தெரிய வந்தது. இவருடைய கணவர் சாமிநாதன். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளது. 

கடந்த 10  வருடங்களாக, கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணத்தால்  கோபித்துக்கொண்டு, முனியம்மாள் தனியாக வசித்து வந்துள்ளார். தன் 3  குழந்தைகளையும் அவர் தனது பெற்றோரின் பாதுகாப்பில் இருக்கிறார். முனியம்மாள், கட்டட வேலைக்குச் சென்று வந்தார். வேலைக்குச் சென்ற இடத்தில் கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவருடன் தவறான தொடர்பு ஏற்பட்டது. இந்த தொடர்பால் இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.  இருவரும் கணவன், மனைவி போல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்குமே சரக்கு அடிக்கும் பழக்கம் இருப்பதால், அடிக்கடி ஒன்றாக அமர்ந்து  குடித்து வருகின்றனர்.  இதுபோன்ற சமயங்களில் இருவரும் போதை தலைக்கேறிய நிலையில் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வார்களாம். இவர்களின் தொல்லையால் வீட்டின் உரிமையாளர் திமனமும் திட்டினார்களாம் இதனால்  வீட்டை மாற்றியுள்ளனர். 

இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் புதிதாக ஒரு வீட்டில் இருவரும் குடியேறினர். இந்நிலையில், செந்தில் குமாரின் தொல்லை தாங்கிக்கொள்ள முடியாத முனியம்மாளுக்கு வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தொடர்பு உல்லாசம் வரை தொடர்ந்துள்ளது. இதனால் இவர்கள் உணவு இடைவேளை நேரத்தில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.  இந்த விஷயம் முதல் கள்ளக்காதலனான செந்தில்குமார், முனியம்மாளிடம் கேட்டபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமையன்று இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த செந்தில்குமார், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து முனியம்மாளின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதையடுத்து  ஆதாரத்தை அழிக்கும்  நோக்கில், சடலத்தைத் தூக்கிச்சென்று அருகில் உள்ள தண்டவாளம் அருகே போட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து அவரை போலீசார்  தீவிரமாக தேடி வருகின்றனர்.