சென்னை செங்குன்றம், பாடியநல்லூரில் வசித்துவரும் தம்பதிக்கு 17 வயதில் மகள் உள்ளார். இவர் பொன்னேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாண்டு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 12ம் தேதியன்று கல்லூரிக்கு சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், பதறிப்போன பெற்றோர் அவரை உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

சென்னை கல்லூரி மாணவியை ஆசை வார்த்தை கூறி ஆந்திராவுக்கு கடத்திச்சென்று பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை

சென்னை செங்குன்றம், பாடியநல்லூரில் வசித்துவரும் தம்பதிக்கு 17 வயதில் மகள் உள்ளார். இவர் பொன்னேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாண்டு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 12ம் தேதியன்று கல்லூரிக்கு சென்ற மாணவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், பதறிப்போன பெற்றோர் அவரை உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

கல்லூரி மாணவி கடத்தல்

இதனையடுத்து, பெற்றோர் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர், போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர். இதில், செங்குன்றம் மொண்டியம்மன் நகர், நேரு தெருவை சேர்ந்த சந்தோஷ் (19) என்ற எலக்ட்ரிஷியன் மாணவியை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினர் தீவிரமாக தேடி மாணவியை ஆந்திராவில் மீட்டனர். 

போக்சோவில் கைது

மாணவியிடம் விசாரித்தபோது, ‘’திருமண ஆசை காட்டி ஆந்திராவுக்கு அழைத்து சென்று அங்குள்ள நண்பர் வீட்டில் தங்கவைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து செங்குன்றம் போலீசார் இவ்வழக்கை அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டனர். இதனையடுத்து, போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சந்தோஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.