Asianet News TamilAsianet News Tamil

அதிர்ச்சி!! திருடிய பைக்கை திருப்பி கேட்டதால் ஆத்திரம்.. அடித்துக் கொலை செய்து கிணற்றில் தூக்கிய வீசிய சம்பவம்

விழுப்புரம் அருகே திருடப்பட்ட தனது இருசக்கர வாகனத்தை திருப்பி கொடுக்காவிடில், போலீசாரிடம் புகார் கொடுத்துவிடுவதாக கூறியதால், அடித்துக்கொலை செய்து உடலை கிணற்றில் தூக்கிய விசிய சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
விழுப்புரம் அருகே திருடப்பட்ட தனது இருசக்கர வாகனத்தை திருப்பி கொடுக்காவிடில், போலீசாரிடம் புகார் கொடுத்துவிடுவதாக கூறியதால், அடித்துக்கொலை செய்து உடலை கிணற்றில் தூக்கிய விசிய சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
 

College student Murder in Villupuram
Author
Villupuram, First Published Jul 21, 2022, 5:52 PM IST

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே டி. எடையார் கிராமத்தைச் சேர்ந்த அருண் என்பவர் அங்குள்ள அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில் பி.ஏ வரலாறு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவரின் இருசக்கர வாகனம் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருடு போனது.  இதுக்குறித்து புகார் ஏதும் கொடுக்காமால் நண்பர்களுடன் சேர்ந்து தேடி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே இவருடைய இருசக்கர வாகனத்தை அதே கிராமத்தைச் சார்ந்த சரத்வீரமணி, சத்தியராஜ், இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட நான்கு பேர் சேர்ந்து இரவோடு இரவாக திருடியதாக சொல்லப்படுகிறது. 

மேலும் படிக்க:நிலத்தை அபகரித்துவிட்டு கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்...? ஓபிஎஸ் சகோதரர் மீது பரபரப்பு புகார்

இதனால் இவர்களிடம் சென்று கல்லூரி மாணவன் அருண் தனது இருசக்கரவாகனத்தை திரும்பி கொடுக்கும்படி கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் வாகனத்தை திருடியதை ஒப்புக்கொண்டதாகவும் அதனை அருண் தனது செல்போனில் பதிவு செய்துக்கொண்டதாகவும் சொல்லபடுகிறது. ஒரு கட்டத்தில் அருணுக்கும் அந்த கும்பலுக்கும் இடையே வாய் தகராறு ஏற்படவே, காவல்நிலையத்தில் வாகன திருட்டு குறித்து புகார் கொடுக்கப் போவதாக அருண் தெரிவித்ததாக சொல்லபடுகிறது. மேலும் தனது செல்போனில் உள்ள காட்சி பதிவை காவல்துறையிடம் ஒப்படைக்கப் போவதாகவும் அவர் கூறியதாக தெரிகிறது. 

மேலும் படிக்க:ஸ்ரீமதிக்கு அதே பள்ளியில் படிக்கும் மாணவனுடன் காதல்...??? டிரைவரிடம் சிக்கிய ஆதாரம்... சவுக்கு சங்கர் பகீர்.

இதனால் ஆத்திரம் அடைந்த நான்கு பேரும் அருணை கொலை செய்வதற்கு திட்டமிட்டுள்ளனர். அதன்படி, இருசக்கர வாகனத்தை தருவதாக் கூறி ஏமாற்றி அழைத்து சென்று, பனப்பாக்கம் ஏரி பகுதியில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். மேலும், கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின்னர் அருண் உடலை அருகில் இருந்த கினற்றில் வீசிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்நிலையில் அருணை காணாமல் அவரது குடும்பத்தினர் தேடி வந்துள்ளனர். அப்போது அந்த கும்பலில் ஒருவன், கஞ்சா போதையில் அருணை கொலை செய்ததை குளறுயுள்ளான்.

மேலும் படிக்க:என்னை விட்டுட்டு உனக்கு இன்னொருத்தன் கேட்குதா... நடு ரோட்டில் மனைவியை வெறி தீர குத்திய கணவன்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள்,  ஒன்று திரண்டு அந்த நான்கு பேரையும் பிடித்து,  திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், காவல்துறையினர் தீயணைப்புத்துறை உதவியுடன் அருண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக  சரத்வீரமணி , சத்தியராஜ் மற்றும் இரண்டு சிறுவர்கள் ஆகிய நான்குபேரையும் போலீசார் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்டவர்களில் இருவர் சிறுவர்கள் என்பதால், சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டனர். மற்ற இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இதுக்குறித்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவனை தங்களிடம் காண்பித்துவிட்டு பிறகு தான் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மாணவனின் குடுமபத்தினர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் கைது செய்யப்பட்டுள்ள நான்கு பேரும், கஞ்சா பழக்கம் உடையவர்கள் என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளதால் அதுகுறித்தும் விசாரணை முடுக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios