ஸ்ரீமதிக்கு அதே பள்ளியில் படிக்கும் மாணவனுடன் காதல்...??? டிரைவரிடம் சிக்கிய ஆதாரம்... சவுக்கு சங்கர் பகீர்.
மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஊடகவியலாளர், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் ஸ்ரீமதி அப்பள்ளியில் பயிலும் மாணவனை காதலித்து வந்துள்ளார்,
மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஊடகவியலாளர், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் ஸ்ரீமதி அப்பள்ளியில் பயிலும் மாணவனை காதலித்து வந்துள்ளார், இது அவரின் தாய்க்குத் தெரியும் என அதிர்ச்சி தெரிவித்துள்ளார்இந்த பள்ளிகள் தான் தன் மகள் படிக்க வேண்டும் என்று சொன்ன ஸ்ரீமதியின் தாய் ஏன் இப்போது அந்தப் பள்ளிக்கு மூடி சீல் வைக்க வேண்டும் என கூறுகிறார் என்றும் சவுக்கு சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியமூரில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்று வந்த ஸ்ரீமதி என்ற மாணவி பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த விவகாரம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மாணவி உயிரிழந்த விவகாரத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு அப்பள்ளியை தாக்கியதுடன், அப்பள்ளி வாகனங்களை தீக்கிரையாக்கி உள்ளனர். ஒட்டுமொத்த பள்ளிக்கூடமும் சூறையாடப்பட்டுள்ளது. 3500க்கும் அதிகமான மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ் எரித்து சாம்பலாக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரையிலும் அம்மாணவி மரணத்தில் மர்மம் நீடிக்கிறது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பலரும் பல வகையில் கருத்து கூறி வருகின்றனர். இந்நிலையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தனது யூடியூப் சேனலில் இதுதொடர்பாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியிட்டுள்ளார். அது பலராலும் பகிரப்பட்டு வருகிறது, மாணவியின் மரணத்தில் கொலைக்கான வாய்ப்பு இல்லை என்றும், தற்கொலைக்கான வாய்ப்புகளே உள்ளது என்ற வகையில் அவரது கருத்துக்கள் அமைந்துள்ளது. மேலும் அந்த மாணவி அப்பள்ளியில் படிக்கும் ஒரு மாணவனுடன் காதலில் ஈடுபட்டு வந்தார் என்ற தகவலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்: மாணவி மரண வழக்கு.. தந்தையின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்டு உத்தரவு..
இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள விவரம் பின்வருமாறு: ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் பலரும் பல வகைகளில் பேசிவருகின்றனர். நான் விசாரித்த வரையில் பள்ளியில் உரிமையாளர் ரவி மிகவும் கறார் பேர்வழிதான், அதற்கு காரணம் அவர் ஏகப்பட்ட கடனில் இருப்பதுதான், அதனால் தான் பீஸ் விவகாரத்தில் அவர் மிகவும் கறாராக இருந்து வந்துள்ளார். ஆனால் அவர் எதோ மாணவியை தவறாகப் பயன்படுத்தி கொன்றுவிட்டார் என்பதுபோல செய்திகள் வேகமாக பரப்பப்படுகிறது, ஆனால் அவர் அப்படிப்பட்ட நபர் அல்ல, அதற்கான சான்றுகளும் இல்லை, அவரின் அறையில் காண்டம் இருந்தது என்றெல்லாம் கூறுகிறார்கள், அதற்கான சாத்தியக்கூறுகளே இல்லை.
மேலும் உயிரிழந்த மாணவியின் தாய் கடந்த மாதம் ஸ்ரீமதியை இந்த பள்ளியிலிருந்து மாற்றி வீட்டுக்கு அருகில் உள்ள வேறொரு பள்ளியில் சேர்த்துள்ளார், ஆனால் அந்த மாணவி படித்தால் இந்த சக்தி பள்ளியில் தான் படிப்பேன் எனக் கூறி அடம்பிடித்ததால் தான் வேறு வழியில்லாமல் மீண்டும் இந்தப் பள்ளியில் வந்து சேர்ந்துள்ளனர். அதற்கு காரணம் என்னவெனில் ஸ்ரீ மதிக்கும் அதே பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும்........ என்ற மாணவனுக்கும் காதல் இருந்து வந்துள்ளது தான் காரணம், இது உண்மை, மாணவர்களையும் விசாரித்துவிட்டோம், ஆசிரியர்களிடமும் விசாரித்துவிட்டோம்,காவல்துறையும் இதைதான் சொல்கிறார்கள்.
இதையும் படியுங்கள்: இதெல்லாம் பார்க்கும்போது காவல்துறையின் மெத்தனமே கலவரத்திற்கு காரணம்.. சும்மா கேள்வியால் தெறிக்கவிடும் சசிகலா
ஸ்ரீமதி காதலித்த மாணவன் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்தவன், இந்த பெண் அகமுடையார் சமூகத்தை சேர்ந்தவர், இதனால் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் இதை எப்படி ஏற்றுக் கொள்வார்கள், அதேபோல் ஒரு கட்டத்தில் இந்த பெண்ணின் காதல் விவகாரம் அவரது வீட்டுக்கு தெரிந்துவிட்டது, அந்த மாணவியும் அந்த பையனும் ஒரே பள்ளிப் வேனில் பயணித்திருக்கிறார்கள் அப்போது இந்த பெண் அந்தப் பையனுக்கு எழுதிய கடிதம் அந்த பள்ளி வேன் டிரைவரிடம் கிடைத்துவிட்டது. அதே அந்த வேன் டிரைவர் அந்தப் பெண்ணின் தாயாரிடம் கொடுத்து விட்டார். அதன்பிறகுதான் ஸ்ரீமதி தாய் அந்தப்பெண்ணின் மாற்றுச் சான்றிதழை பெற்று வேறு பள்ளியில் சேர்த்துள்ளார்.
இந்தநிலையில்தான் தனது காதல் விவகாரம் வகுப்பறையில், மாணவர்கள் மத்தியில், ஆசிரியர்கள் என எல்லோருக்கும் தெரிந்துவிட்டது என்று அந்த மாணவி வருத்தத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில்தான் அந்த மாணவி உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு குழு மற்றும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் விரைவில் உண்மை தெரியவரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.