என்னை விட்டுட்டு உனக்கு இன்னொருத்தன் கேட்குதா... நடு ரோட்டில் மனைவியை வெறி தீர குத்திய கணவன்.
கணவனை விட்டு பிரிந்து தனது 5 வயது மகளுடன் கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்திய மனைவியை கணவன் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
கணவனை விட்டு பிரிந்து தனது 5 வயது மகளுடன் கள்ளக்காதலனுடன் குடும்பம் நடத்திய மனைவியை கணவன் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இந்த கொடூரம் நடந்துள்ளது.
பெரும்பாலான கொலை தற்கொலைகள் கள்ளக் காதலை மையமாக வைத்தே அரங்கேறி வருகிறது, திருமண உறவில் பூரண நம்பிக்கை இல்லாதவர்கள் திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது, சிலர் சில நேரங்களில் அந்த உறவில் இருந்து வெளிவர முடியாமல் தங்கள் உயிரையே பறிகொடுக்கும் அவலத்திற்கும் தள்ளப்படுகின்றனர். இந்த வரிசையில் கணவனைப் பிரிந்து கள்ளக் காதலனுடன் ஊர் சுற்றி வந்த மனைவியை கணவன் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது.
முழு விவரம் பின்வருமாறு:- மத்திய பிரதேச மாநிலம் ஷம்ஷாபாத் மாவட்டத்திலுள்ள பீபால்தார் காவல் நிலையத்துக்கு உட்பட்ட அசோக் கார்டன் கைலாஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் சுனில், இவரது மனைவி அருணா பாய் என்ற ரச்சனா (22) இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து ரச்சனா ராஜேந்திரன் மால்வியா (25) என்ற நபருடன் குடும்பம் நடத்தி வந்தார். இது அவரது கணவர் சுனில் மால்வியாக்கு தெரிந்தது, இதனால் ஆத்திரமடைந்த சுனில் மால்வியா தனது மனைவி அருணா பாய் என்கிற ரச்சனாவையும் அவரது காதலன் ராஜேந்தர் மால்வியாவையும் கொலை செய்ய முடிவு செய்தார்.
இதையும் படியுங்கள்: காதலனை கட்டிப்பிடித்து பைக்கில் ஊர் சுற்றிய மனைவி.. நேரில் பார்த்த கணவன்.. கழுத்தை நெறித்து கொலை.
செம்ராவில் உள்ள கைலாஷ் நகரில் ராஜேந்திரனும் அருணாவும் வசித்து வருவது அவருக்கு தெரிந்தது. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக அருணா மற்றும் ராஜேந்திரனை அவர் பின்தொடர்ந்தார். இருவரும் வெளியூரிலிருந்து வேலை செய்துவிட்டு மாலை நேரத்தில் வீடு திரும்புவதை அவர் உறுதி செய்துகொண்டார், இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை கைலாஷ் நகர் செம்ரா கமல் மாவு மில் அருகே தனது மனைவிக்காகவும் அவரின் கள்ளக்காதலுக்காகவும் சுனில் காத்திருந்தார் இந்நிலையில் ரச்சனாவும் அவரது காதலர் ராஜேந்திரனும் தனது ஐந்து வயது மகளுடன் பைக்கில் அந்த வழியாக வந்தனர். அப்போது சுனில் அவர்களைப் பின் தொடர்ந்தார் ஒரு இடத்தில் அவர்களை வழிமறித்து ராஜேந்திரனை சுனில் கட்டையால் பலமாக தாக்கினார்.
இதையும் படியுங்கள்: அடத்தூ... அண்ணி மீது ஏற்பட்ட ஒருதலைக் காதல்... அண்ணனை தலையில் கல்லால் தாக்கி கொன்ற தம்பி.
ரச்சனாவும், ராஜேந்திரனும் தரையில் சரிந்து விழுந்தனர், பின்னர் சுனில் ராஜேந்திரனின் கழுத்தை கரகரவென அறுத்தார், பின்னர் அவரின் வயிற்றில் கத்தியால் சரமாரியாக குத்தினார், அதன் பின் ரச்சனாவையும் அவர் சரமாரியாக குத்தி படுகொலை செய்தார். இது அனைத்தூயும் தனது ஐந்து வயது மகள் கண்ணெதிரிலேயே சுனில் செய்தார். பின்னர் அங்கிருந்து அவர் கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமானார். இதையடுத்து அங்கு வந்த போலீசார், பிரேதங்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகள் கொடுத்த தகவலின்படி சுனிலை போலீசார் கைது செய்தனர்.
அவருக்கு உதவியாக இருந்த அவரது நண்பர் மதன் சிங்கையும் கைது செய்தனர். ரச்சனாவும் அவரது காதலர் ராஜேந்திரனும் உறவினர்கள் ஒருவரின் திருமணத்தில் சந்தித்தனர் அன்றிலிருந்து ஒருவரை ஒருவர் நேசிக்க ஆரம்பித்து அவர்கள் கள்ளக்காதலில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் கணவனால் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.