பிரசவத்திற்காக திருவனந்தபுரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தன்னுடைய சகோதரியை பார்க்க சென்ற கல்லூரி மாணவி, தான் காதலனால் கற்பழிக்கப்பட்ட பெண் தன்னோடு உடல் சுகத்துக்காக மட்டுமே என்னை பயன்படுத்திக்கொண்டாள் என வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சகோதரியை பார்க்க கல்லூரி மாணவி சென்றாள். அங்கு அதே மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அக்காவை பார்க்க கொல்லம் இடவஞ்சேரியை சேர்ந்த அனீஸ் என்ற இளைஞர் வந்தியிருந்தார்.

இந்த நிலையில் ஒரே நேரத்தில் இருவருடைய சகோதரிக்கும் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததும் உறவினர்களின் கையில் குழந்தையை கொடுப்பதற்காக நர்ஸ் இரண்டு பேரை உள்ளே அழைத்தார். அப்போது உள்ளே சென்ற அந்த கல்லூரி மாணவி மற்றும் இளைஞர் அனிஸிடம் நர்ஸ் குழந்தையை கொடுக்கும் போது தவறுதலாக அனிஸ் சகோதரி குழந்தையை கல்லூரி மாணவியிடமும், மாணவியின் சகோதரி குழந்தையை அனிஸிடமும் மாற்றி கொடுத்துவிட்டார் நர்ஸ் . உடனே தவறை புரிந்து கொண்டு சுதாகரித்த நர்ஸ் இருவரிடமும் குழந்தையை மாற்றிக் கொள்ளுங்கள் என கூறினாள்.

அப்போது இருவரும் மாறி மாறி சிரித்து கொண்ட இருவருக்கும் இடையே ஏற்பட்ட அந்த சிரிப்பு அப்போதே காதலாக மாறியது. அதன் பிறகு இருவரும் போன் நம்பரை பரிமாறிக்கொண்ட இருவரும் செல்போனில் தினமும் நேரம் காலம் பார்க்காமல் மணிக் கணக்கில் பேசி தங்களின் காதலை வளர்த்தனர். 

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் கொல்லத்தில் இருந்து கல்லூரி மாணவிக்கு போன் செய்த அனிஸ் அவளிடம் திருவனந்தபுரத்துக்கு வருமாறும் அங்கு வைத்து கல்யாணம் செய்து கொள்ளலாம் என்று அனிஸ் கூறியுள்ளார். அதை நம்பி கல்லூரிக்கு செல்வதாக பெற்றோரிடம் பொய் சொல்லி விட்டு திருவனந்தபுரம் சென்ற மாணவியை அனிஸ் லாட்ஜிக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். அதோடு விடாமல் அங்கிருந்து பாலக்காடு மற்றும் கோவை உள்ளிட்ட சில ஊர்களுக்கு அழைத்து சென்று அங்கு வைத்தும் அந்த பெண்ணை அனுபவித்துள்ளார். 

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு சென்ற தன மகள் வரவில்லையே என பறிப்போன பெற்றோர், உடனே போலீசில் கல்லூரி சென்ற மகளை காணவில்லை என்று களியக்காவிளை போலிசில் புகார் கொடுத்தனர். கன்னியாகுமரியில் வைத்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருவரும் நாகர்கோவிலுக்கு வந்துள்ளனர். பின்னர் மாணவியை குழித்துறை பேருந்து நிலையத்திலேயே விட்டு விட்டு அனிஸ் கேரளாவுக்கு தப்பி சென்றுள்ளார். தலைமறைவான அந்த வாலிபரை அந்த கல்லூரி மாணவி அழுதுகொண்டே தேடியுள்ளார் ஆனால அவர் எங்கே தேடியும் கிடைக்காததால், அதன்பிறகு  வீட்டிற்கு சென்று பெற்றோர்களிடம் தனக்கு நடந்ததை கூறி மாணவி கதறி அழுதுள்ளார்.  இதனையடுத்து குழித்துறை மகளிர் போலிசில் மேலும் புகார் கொடுக்கப்பட்டது. 

வாலிபர் அனிஸை தேடி கேரளா சென்ற போலிசார் அவனை கைது செய்து விசாரித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அந்த விசாரணையில் அனிசுக்கு ஏற்கனவே கல்யாணமாகி இரண்டு குழந்தைகளும் இருப்பது தெரியவந்தது. மேலும் கல்லூரி மாணவி தன்னை கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென அவள் எப்போதும் கேட்கவே இல்லை,  அவள் அந்த மாதிரி உடல் சுகத்துக்காக மட்டும் தான் என்னிடம் பழகினாள் என்று அவன் கூறியுள்ளது போலீசாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.