யார் அந்த 4 பேர்..! ஜமேசா முபின் தூக்கி கொண்டு சென்ற மர்ம பொருள் என்ன..? சிசிடிவி காட்சி மூலம் போலீஸ் விசாரணை
கோவையில் சிலிண்டர் வெடி விபத்திற்கு முன் தனது வீட்டில் இருந்த மர்ம பொருளை ஜமேசா முபின் மேலும் 4 பேருடன் தூக்கி சென்ற காட்சி வெளியாகியுள்ளது. இதனையடுத்து மர்ம பொருள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரில் வெடித்த சிலிண்டர்
கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.15 மணிக்கு கார் ஒன்று பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியது. காரில் இருந்த நபர் தீயில் கருகி உயிரிழந்தார். அப்பகுதியில் இருந்த மக்கள் இந்த சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் அளித்தனர். இதனையடுத்து அந்த பகுதி முழுவதும் சீலிடப்பட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஆணி, பால்ராஸ் குண்டுகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து சதி வேலையாக இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்த தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, கோவை உக்கடம் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே இறந்தது ஜமேசா முபின் என தெரியவந்துள்ளதாக கூறினார்.
திடீரென வெடித்த சிலிண்டர்..! இரண்டாக உடைந்த கார்...! துடி துடித்து ஒருவர் பலி
வெடி பொருட்கள் பறிமுதல்
இதனையடுத்து அவரின் வீட்டில் நடைபெற்ற சோதனையில் வெடிப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்த நபர் மீது வழக்குகள் இல்லை. ஆனால், அவர் வீட்டில் என்.ஐ.ஏ சோதனை செய்துள்ளது. சதி திட்டத்திற்காக வெடி பொருட்களை வைத்திருந்திருக்கலாம் என்று டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்திருந்தார். இந்தநிலையில், ஜமேஷா முபின் வீட்டின் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சனிக்கிழமை இரவு 11.25 மணிக்கு ஜமேஷா முபின் வீட்டில் இருந்து அவர் உட்பட 5 பேர் மர்ம்பொருளை தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அந்த சிசிடிவி காட்சிகளில் உள்ள மற்ற நபர்கள் 4 பேர் யார் என்பது குறித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கார் வெடிப்பு விவகாரம்... உயிரிழந்தவர் வீட்டில் வெடிமருந்துகள்... டிஜிபி அதிர்ச்சி தகவல்!!
மர்ம பொருள் என்ன
அதே போல கோவையில் ஞாயிற்று கிழமை அதிகாலை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் ஜமேஷா முபீன் உயிரிழந்தார். அந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதிகாலை 4 மணி அளவில் சாலையில் கார் செல்வது, கார் நிற்பது பின்பு வெடித்து சிதறும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்