கோவை இளைஞருக்கு போக்சோ சட்டத்தில் 10 ஆண்டு கடுங்காவல் சிறை
சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்கும் அவருக்கு உடந்தையாக இருந்த 2 நண்பர்களுக்கும் போக்சோ நீதிமன்றம் அபராதத்துடன் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை கொடுத்திருக்கிறது.
2019ஆம் ஆண்டு 16 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் 34 வயது இளைஞர் மற்றும் அவரது இரண்டு நண்பர்களுக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலா ரூ.15,000 அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் அம்மன்குளத்தில் எரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் லூயிஸ் என்கிற ஜோஸ்வா. இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 8ஆம் தேதி ஒரு சிறுமியைக் கடத்திச் சென்று அன்னூரில் வைத்து வலுக்கட்டாயமாக திருமணம் செய்துகொண்டார். பின் அந்தப் பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
தபால் துறையின் சூப்பர்ஹிட் திட்டம்! 12 ஆயிரம் டெபாசிட் செய்தால் ஒரு கோடியாக மாறும்!
சிறுமியின் தந்தை ராமநாதபுரம் காவல்துறையினரிடம் புகார் கொடுத்தார். காவல்துறையினர் ஜூன் 12, 2019 அன்று சிறுமியை மீட்டு, குழந்தைகள் நலக் குழுவில் (CWC) ஆஜர்படுத்தினர். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜோஸ்வாவையும் கைது செய்தனர். சிறுமியை கடத்த ஜோஸ்வாவுக்கு உதவியதற்காக அவரது இரு நண்பர்களான ராசுக்குட்டி மற்றும் சீனிவாசனையும் போலீசார் கைது செய்தனர்.
கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இவர்கள் மூவர் மீதான குற்றப்பத்திரிக்கையை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து நேற்று (திங்கள்கிழமை) நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது.
உலகின் உயரமான ரயில் பாலத்தில் பொலேரோ கார் ஓட்டி சோதனை!